கோவையில் முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கு சிறப்பான முறையில் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல் முகாம்

கோவை மாவட்டத்தில் முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கு சிறப்பான முறையில் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல் முகாம் நடத்த அரசு சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கோவை மாவட்ட ஆசியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

ஐ.டி.ஐ, பொறியியல் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்காக இனிவரும் காலங்களில் நடத்தப்படவிருக்கும் நுழைவு தேர்வுகளை எதிர்கொள்ளவும் தயார்படுத்திக் கொள்ளவும், முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கு சிறப்பான முறையில் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல் முகாம் வழங்க அரசு சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது.

எனவே, இந்தப் பயிற்சி முகாமில் கலந்து கொள்வதன் மூலம், படிக்கும் காலங்களில் தொழிற் கல்வியினை சிறப்பான முறையில் கற்றுத் தேர்ச்சி அடையவும். வேலை வாய்ப்புக்கான வழிகாட்டுதலாகவும் இம்முகாம் உதவிகரமாக இருக்கும். கல்லூரிப் படிப்பினை முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு பெறுவதற்கான வழிகாட்டுதலும், ஆங்கிலத்தில் சரளமாக பேசுவதற்கான பயிற்சியும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

முன்னாள் படைவீரர்களின் பிள்ளைகளுக்கென பள்ளி மற்றும் உயர்கல்வித் துறைகளில் தங்கள் பணி வாய்ப்பையம் திறனையும் மேம்படுத்த, திறன் மேம்பாட்டு ஆலோசனைகள் வழங்கப்படும்.

மேலும், மேற்கூரிய ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல் முகாம் மற்றும் திறன் மேம்பாட்டு. பயிற்சிகளில் கலந்து கொள்ள தங்களது விருப்பத்தினை எழுத்துப்பூர்வமாக மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தில் தெரிவிக்குமாறு கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்தார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...