டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்காக, கோவை மாநகராட்சி சார்பாக பல்வேறு நடடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று (ஆகஸ்ட் 23) கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கத்தில், மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் முன்னிலையில், உலக சுகாதார நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர் நேமிநாதன், அரசு மருத்துவமனை செவிலியர்கள், நகர்நல மையங்களில் பணிபுரியும் செவிலியர்கள் மற்றும் தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்களுக்கு, டெங்கு நோயின் ஆரம்ப குறிப்புகள் மேலாண்மை கருத்தரங்கம் நடத்தினார்கள்.
இந்த கருத்தரங்கத்தில், காய்ச்சலை எவ்வாறு பிரித்து கண்டறிவது, எந்த வகை காய்ச்சலை தொடர் சிகிச்சைக்காக உயர் மையத்திற்கு அனுப்புவது, காய்ச்சல் உறுதி செய்யப்பட்டவர்களுக்கு ஐசியு-வில் உரிய சிகிச்சை மேற்கொள்ளுவது என்பது பற்றி மருத்துவர் நேமிநாதன் பல்வேறு ஆலோசனைகளை செவிலியர்களுக்கு வழங்கினார்.
இக்கூட்டத்தில், அனைத்து மண்டல உதவி ஆணையர்கள், அனைத்து மண்டல சுகாதார அலுவலர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.