கோவை மாநகராட்சிக்கு சொந்தமான வெள்ளலூர் பகுதியில் பேருந்து நிலையம் அமைப்பது குறித்து ஆலோசனை

கோவை மாநகராட்சி, பிரதான அலுவலகக் கூட்டரங்கில் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தலைமையில் கோவை மாநகராட்சிக்கு சொந்தமான வெள்ளலூர் பகுதியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைப்பது குறித்த அனைத்து துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், மகேந்திரா கன்சல்டிங் பொறியாளர்கள் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தின் வடிவமைப்பு, வரைவுத்திட்டங்கள், உள்கட்டமைப்புகள், போக்குவரத்துக்கு தேவையான உரிய சாலைகள், பயனாளிகளின் வசதிகள், திட்டத்திற்கு தேவையான நிலங்கள், பேருந்துகள் நிறுத்துவதற்கு தேவையான வசதிகள், பயனாளிகளின் பாதுகாப்பு மற்றும் திட்டத்திற்கான செலவினத்தொகை போன்ற விவரங்களை விளக்கக்காட்சி மூலம் விளக்கி காட்டினார்கள். 

கூட்டத்தில் கலந்து கொண்ட நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள், போக்குவரத்துத்துறை அலுவலர்கள், மாநகராட்சி உயர் அலுவலர்கள், காவல்துறை அலுவலர்கள், மின்சாரத்துறை அலுவலர்கள், பொதுப்பணித்துறை அலுவலர்கள் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அலுவலர்கள் ஆகியோர் சிறப்பான ஒருங்கிணைந்த பேருந்துநிலையம் அமைப்பதற்கு அவரவர் துறை சார்ந்த கருத்துக்களை எடுத்துரைத்தனர். 

இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் மாநகராட்சி கண்காணிப்பு பொறியாளர் என்.நடராஜன், மாநகராட்சி செயற்பொறியாளர் ஏ.லட்சுமனன், நகரமைப்பு அலுவலர் (பொ) எஸ்.ரவிச்சந்திரன், மாநகரப் பொறியாளர் (பொ) வி.பார்வதி மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக உயர் அலுவலர்கள், கோவை அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள், கோவை தெற்கு தீயணைப்பு மீட்புப்பணி அலுவலர், மாநகர காவல் போக்குவரத்து உதவி ஆணையர், உதவி பொறியாளர் மின்சார வாரியம் வெள்ளலூர், தேசிய நெடுஞ்சாலைத்துறை உயர் அலுவலர்கள், மாவட்ட சுற்றச்சூழல் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...