வேலை வாங்கித் தருவதாக மோசடி- காவல் ஆணையரிடம் மாணவர்கள் புகார்

வேலை வாங்கித் தருவதாக பணமோசடியில் ஈடுபட்ட தனியார் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இன்று கோவை மாநகர காவல் ஆணையரிடம் பாதிக்கப்பட்ட மாணவர்கள் புகார் மனு அளித்தனர்.

கோவை மாவட்டம், ராம்நகர் பகுதியில் இயங்கிவரும் ஜெனிக் கம்யூனிகேசன் என்னும் தனியார் நிறுவனம் படித்த மாணவர்களுக்கு வேலை வாங்கித் தருவதாக முகநூல், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் விளம்பரம் வெளியிட்டுள்ளது. இதனை நம்பிய நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் அந்நிறுவனத்தில் சேர்ந்துள்ளனர். 

அவ்வாறு சேர்ந்த மாணவர்களுக்கு ஒரு மாத கால பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு அவர்களிடம் இருந்து 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை வசூல் செய்யப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து, நீண்டகாலமாகியும் வேலை வாங்கித் தராமல் நிறுவனம் இழுத்தடித்துள்ளது. இதுகுறித்து மாணவர்கள் கேட்டதற்கு, பயிற்சிக்கு மட்டுமே தொகை வசூலிக்கப்பட்டதாகவும், வேலைஅளிக்கும் நிறுவனங்களில் தாங்களாகவே வேலை தேடிக்கொள்ள வேண்டும் எனவும் அலட்சியமாக ஜெனிக் கம்யூனிகேசன் நிர்வாகத் தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவர்கள் கூறுகையில், ஜெனிக் கம்யூனிகேசன் நிறுவனத்தினர் வேலை வாங்கித் தருவதாக நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களிடம் 5 முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை வசூலித்தனர். ஆனால் தற்போது வேலை வாங்கித் தராமல் அலைக்கழித்து வருகின்றனர். இதுகுறித்து உரிமையாளரிடம் முறையிட்டதற்காக, நாங்கள் இணைந்து உரிமையாளரை கொலை செய்ய முயற்சிப்பதாக அவரது வழக்கறிஞர் எங்களை மிரட்டி வருகிறார்.

எனவே, தங்களிடம் பண மோசடியில் ஈடுபட்ட தனியார் நிறுவனத்தின் உரிமையாளர் கரும்புக்கடை, ஆத்துப்பாலம் பகுதியைச் சேர்ந்த அக்பர் அசன் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். செலுத்திய பணத்தை மீண்டும் பெற்றுத் தர வேண்டும் என கோவை மாநகர காவல் ஆணையரிடம் 70-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் மனு அளித்தனர்.

Newsletter

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

ராமநாதபுரத்தில் மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை

கோவை ராமநாதபுரம் அடுக்குமாடியில் தனியாக வசித்த 69 வயது கோமதியை கழுத்தை நெரித்துக் கொலை செய்து தங்க நகைகள் கொள்ளையடித்த த...

கோவை மாவட்டத்தில் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களிப்பு

கோவை மாவட்டத்தின் 10 சட்டமன்ற தொகுதிகளில் நடந்த தேர்தலில் மொத்தம் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களித்துள்ளனர். கவு...

காரமடை ரயில் நிலைய விரிவாக்கப் பணிக்காக தோலம்பாளையம் ரயில்வே கேட் காலவரையின்றி மூடல்

காரமடை ரயில் நிலைய விரிவாக்க பணிகள் மற்றும் புதிய பிளாட்பாரம் கட்டுமானத்திற்காக காரமடை - தோலம்பாளையம் இடையேயான ரயில்வே க...