தமிழக துணை முதலமைச்சராக பதவியேற்கும் ஓ.பன்னீர் செல்வத்திற்கு சிஐஐ வாழ்த்து

தமிழக துணை முதலமைச்சராக பதவியேற்கும் ஓ.பன்னீர் செல்வத்திற்கு கோவை சிஐஐ இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் சார்பில் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, சிஐஐ கோவை மண்டலத்தின் தலைவர் எஸ்.நாராயணன் தெரிவித்துள்ளதாவது:-

தமிழக அமைச்சரவைக்கு புதிய அமைச்சர்கள் பதவியேற்றுள்ளது மேலும் வளர்ச்சியை உறுதி செய்யும். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சமூக, பொருளாதார முன்முயற்சியினை மேம்படுத்தி வருகிறார். தற்போது, ஒன்றை அணியாக அதிமுக இணைந்துள்ள சூழலில் பன்னீர் செல்வத்திற்கு நிதித்துறை பொருப்பும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால், தொழில் நிறுவனங்களின் மீது தனி கவனம் கொள்ளப்படும். 

புதிய முதலீடுகளை ஈர்ப்பது, கல்வி, திறன் மேம்பாடு, தொழில் முயற்சி, மாவட்ட வளர்ச்சி மற்றும் எம்எஸ்எம்இ-கள் ஆகியவற்றின் மீது கவனம் செலுத்துவதன் மூலம் தமிழகம் வளர்ச்சியடையும்.

தற்போது, மாநில அரசுடன் சிஐஐ நெருக்கமான உறவினை ஏற்படுத்தி பணியாற்றும்" என்றார்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...