கோவை சிங்காநல்லூர் இஎஸ்ஐ பகுதியில் சாலை ஓரத்தில் இருந்த மரங்களை வெட்ட பொதுமக்கள் எதிர்ப்பு

கோவை சிங்காநல்லூர் இஎஸ்ஐ அடுத்துள்ள காமராஜர் சாலையில் செயல்பட்டு வரும் தனியார் மில் அருகே இருந்த மரங்களை நெடுஞ்சாலைத் துறை ஊழியர்கள் வெட்டினர். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து மீதமுள்ள மரங்கள் வெட்டப்படுவது நிறுத்தப்பட்டது.



இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

தனியார் மில் அருகே சாலை ஓரத்தில் இருந்த மரங்களால் எந்த ஒரு பாதிப்பும் இல்லாத நிலையில் இந்த மரங்களை நெடுஞ்சாலைத் துறையினர் எதற்கு வெட்ட வேண்டும். தனியார் மில்லின் காம்பவுண்ட் அருகில் ஏ.டி.எம் இயந்திரம் அமைக்க பணி மேற்கொண்டபோது மரத்தின் வேர் பாதிக்கப்பட்டு மரம் சாய்ந்துவிட்டதாக மரம் வெட்டியவர்கள் கூறுகின்றனர். இது குறித்து மில் நிர்வாகத்திடம் கேட்டபோது மரத்தை அகற்ற தாங்கள் சொல்லவில்லை என தெரிவிக்கின்றனர். இவ்வாறு அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். 



இதனைத் தொடர்ந்து மரங்களை வெட்ட வந்தவர்களுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து 5 மரங்கள் வெட்டப்பட்டிருந்த நிலையில் மீதமுள்ள 3 மரங்களை வெட்டாமல் வெட்டபட்ட கிளைகளை மட்டும் நெடுஞ்சாலைத் துறையினர் அப்புறப்படுத்தி எடுத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதுடன் பரபரப்பு நிலவியது.

Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...