அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டம் : பள்ளிகள் முடங்கும் அபாயம் !

ஊதிய உயர்வு, புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய முறையை அமல்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் இன்று மாநிலம் தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

'ஜாக்டோ' என்பது அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பாகும். 'ஜியோ' ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு. இந்த இரு கூட்டமைப்புகளும் இன்று தமிழகத்தில் மாநிலம் தழுவிய வேலை நித்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தங்களது நீண்டகால கோரிக்கைகளான ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய முறையை நடைமுறை படுத்துதல், மதிப்பு ஊதிய முறையை நீக்கி வரையறுக்கப்பட்ட ஊதியத்தை வழங்கிடுதல் உள்ளிட்ட 3 கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்தப்படும் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் பல்வேறு அரசு ஊழியர்கள் கலந்து கொள்கின்றனர். 

இதனால், அரசு அலுவலகங்களில் பணி முடங்கியுள்ளது. அதோடு, ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டிருப்பதால் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், அரசு பள்ளிகளுக்கு தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கும் பணியில் மாவட்ட நிர்வாகம் இறங்கியுள்ளது. போராட்டம் காரணமாக பள்ளிகள் பாதிக்காத வகையில் பிற சங்கங்களை சேர்ந்த ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள் பகுதி நேர ஆசிரியர்களை கொண்டு, வழக்கம் போல் பள்ளிகள் இயக்க அரசு அறிவுறுத்தியுள்ளது.

Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...