அரசு புறம்போக்கு நிலங்களில் ஆக்கிரமிப்பு செய்வோர்களின் மீது புகார்களை http://gdp.tn.gov.in என்ற வலைதளம் வாயிலாக தெரிவிக்கலாம் என கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டத்தில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்களில் ஆக்கிரமப்பு மேற்கொள்ளப்பட்டது தொடர்பான புகார்களை பொதுமக்கள் தபால் மூலமாகவோ, அல்லது நேரடியாகவோ வட்டாட்சியர், வருவாய் கோட்டாட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் அளித்து வந்தனர்.
தற்போது, அந்த நடைமுறையை எளிமையாக்கும் வகையில் பொதுமக்கள் தங்கள் இருப்பிடத்திலிருந்தே அரசு புறம்போக்கு நிலங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆக்கிரமிப்பின் மீது நடவடிக்கை மேற்கொள்ள புகார்களை இணைய வழி மூலம் பதிவு செய்ய அரசு சார்பில் தனியாக http://gdp.tn.gov.in என்ற வலைதளம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் மட்டும் இந்த இணையவழியினை பயன்படுத்தி அரசு புறம்போக்கு நிலங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆக்கிரமிப்பு குறித்து புகார்களை பதிவு செய்து தீர்வு பெற அறிவுறுத்தப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.