மாநகராட்சிக்கு உட்பட்ட 1.47 ஏக்கர் நிலம் மீட்பு

கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் உத்தரவின் பேரில் கோவைக்குட்பட்ட 5 மண்டலங்களில் ஆக்கிரமிக்கப்பட்ட 1.47 ஏக்கர் மாநகராட்சி பொது ஒதுக்கீடு இடங்கள் மீட்கப்பட்டு சுத்தம் செய்து மாநகராட்சியின் பெயர் பலகை வைக்கப்பட்டது.



கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்.33, காளப்பட்டி, அசோகா நகரில் 23.43 சென்ட் பரப்பும், மேற்கு மண்டலத்திற்குட்பட்ட, வடவள்ளி, வார்டு எண்.16, ஜி.பி.கார்டன் பகுதியில் உள்ள 13.68 சென்ட் பரப்பும், வடக்கு மண்டலத்திற்குட்பட்ட வெள்ளக்கிணர், வார்டு எண்.43 அதிர்ஷ்டலட்சுமி கார்டன் பகுதியில் உள்ள 75.70 சென்ட் பரப்பும், தெற்கு மண்டலத்திற்குட்பட்ட குனியமுத்தூர், வார்டு எண்.87 பாரதிநகர் பகுதியில் உள்ள 6 சென்ட் பரப்பும் மற்றும் மத்திய மண்டலத்திற்குட்பட்ட கணபதி, வார்டு எண்.48 செல்வ குமாரசாமி நகர் பகுதியில் உள்ள 28.02 சென்ட் பரப்பும் ஆகமொத்தம் 1.47 ஏக்கர் பரப்பளவிலான பொது ஒதுக்கீடு பகுதிகள் மீட்க்கப்பட்டு, சுத்தம் செய்து, மாநராட்சி பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.



மேலும், மாநகராட்சியின் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவில் அமையும் பொது ஒதுக்கீடு இடங்கள் சம்பந்தமாக, உரிய ஆய்வு செய்து தொடந்து நடவடிக்கை எடுக்குமாறு மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர்க்கு, மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...