கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நல்லிணக்க நாள் உறுதிமொழியை ஆட்சியர் அலுவலக அலுவலர்கள் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் எடுத்துக்கொண்டனர்.

இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

நீலகிரி:-

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தெ.பாஸ்கரபாண்டியன் தலைமையில் நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அரசுத் துறை அலுவலர்கள் பலர் பங்கேற்று உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.