தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்தில் இருவார கால தூய்மை விழிப்புணர்வு நடவடிக்கைகளின் முதல் மற்றும் இரண்டாம் நாள்

இந்திய ரயில்வே ரயில் நிலையங்கள் மற்றும் இதர ரயில்வே இடங்களில் சுற்றுப்புற தூய்மையை மேம்படுத்த பயணிகள் மற்றும் ரயில்உபயோகிப்பாளர்களின் ஒத்துழைப்போடு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தெற்கு ரயில்வே சேலம் கோட்டம், இத்தகு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக 16.08.2017 முதல் 31.08.2017 வரை இரு வார காலத்திற்கு மாண்புமிகு மத்திய ரயில்வே அமைச்சர் திரு. சுரேஷ் பிரபு அவர்களின் வழிகாட்டுதலின் படி தூய்மை விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த உள்ளது. இவை தூய்மை விழிப்புணர்வு நாள், தூய்மை பிரச்சார நாள், போன்ற பல்வேறு தலைப்புகளில் மேற்கொள்ளப்படும். 

இருவார கால நிகழ்வுகளின் முதல் நாளான நேற்று (16.08.2017) தூய்மை விழிப்புணர்வு நாளாக அனுசரிக்கப்பட்டது. நேற்று சேலம், கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, ஊட்டி போன்ற முக்கிய ரயில்நிலையங்களில், ரயில்வே ஊழியர்கள், ரயில்வே ஒப்பந்த ஊழியர்கள், ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர்கள் மற்றும் ரயில் பயணிகள் சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் மற்றும் மேற்பார்வையாளர்கள் வழி நடத்த தூய்மை உறுதி மொழி மேற்கொண்டனர். 



இரண்டாம் நாளான இன்று இன்று (17.08.2017) தூய்மை பிரச்சார நாளாக அனுசரிக்கப்பட்டது. இன்று சேலம் கோட்ட தலைமை அலுவலகத்தில் சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் திரு ஹரிசங்கர் வர்மா அவர்கள் தலைமையில் சேலம் கோட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் நாடெங்கிலும் பொது இடங்களை சுத்தமாக பராமரிக்கவும், ரயில்நிலையங்கள் மற்றும் ரயில்வே இடங்களை மேலும் சுத்தமாக பராமரிக்கவும், மற்றவர்களிடையே சுத்தம் பற்றிய விழிப்புணர்வு உண்டாக்கவும், தங்களது நேரம் மற்றும் சக்தியை ஈடுபடுத்துவதாக தூய்மை உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.



Newsletter

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...