ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை கமிஷன் உண்மையை கொண்டு வராது- புதிய தமிழகம் கட்சி தலைவர் பேட்டி

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான விசாரணை கமிஷன் உண்மையை கொண்டு வராது என புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

கோவை குனியமுத்தூரில் அந்துள்ள தனது இல்லத்தில் இன்று டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான விசாரணை கமிஷன் உண்மையை கொண்டு வராது. எந்தவொரு ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையிலான விசாரணை கமிஷன்களும், உண்மையை வெளிக்கொண்டு வந்தது இல்லை.

நீட் தேர்வு விவகாரத்தில் ஓராண்டு தமிழகத்திற்கு விலக்கு அளிக்க உள்ளதாக மத்திய அரசு முடிவு எடுத்ததே தற்போது ஏற்பட்டுள்ள குழப்பத்திற்கு காரணம். எதிர்க் கட்சிகளின் நெருக்கடி மற்றும் தொல்லைகளை தாங்கமுடியாமல் தான் தமிழக அரசு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற முயற்சிக்கிறது. நீட் தேர்வில் விலக்கு அளித்தால் பயன் பெறுபவர்கள் குறித்த வெள்ளை அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும்.

கல்வித் திட்டங்களை மாற்றாமல் மாணவர்களின் கல்வித்தரத்தை குறைக்கும் வகையில் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற தமிழக அரசு முயற்சிக்கக் கூடாது. மேலும் நீட் தேர்வு விவகாரத்தில் அரியலூரை சேர்ந்த மாணவி அனிதாவை எதிர்மனுதாரராக சேர்த்திருப்பது தவறானது. அவரை தலித் மாணவி என முன்னிறுத்தி இருப்பது தலித் சமூகத்தை இழிவுபடுத்தும் வகையில் உள்ளது.

இவ்வாறு புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...