திமுக முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் 84-வது பிறந்தநாள் விழாவையொட்டி தமிழகம் முழுவதும் திமுக-வினர் அவரது திருவுருவ படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக கோவை மாநகர் வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட திமுக-வினர் சார்பில் கோவை டாடாபாத்தில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் முரசொலிமாறன் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
மாநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக், மாநகர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் முத்துசாமி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் முரசொலிமாறன் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி திமுக கட்சியினர் மற்றும் தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர்.
இதேப்போல், தெப்பக்குளம் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் நாச்சிமுத்து, வழக்கறிஞர் கணேஷ்குமார் ஆகியோர் மலரஞ்சலி செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சிகளில், முன்னாள் எம்பி விடுதலை விரும்பி, மாவட்ட துணைச் செயலாளர்கள் ரவிச்சந்திரன், மதனகோபால், பகுதி செயலாளர்கள் வி.பி.செல்வராஜ், சுந்தரம், புதூர் மணி, மகளிரணியை சேர்ந்த உமா மகேஷ்வரி, சரஸ்வதி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.