நீட் தேர்வின் அடிப்படையிலேயே மருத்துவக் கலந்தாய்வு நடத்த வேண்டும் எனக் கோரி சிபிஎஸ்சி மாணவர்கள் தர்ணா

நீட் தேர்வின் அடிப்படையிலே இந்த ஆண்டு மருத்துவக் கலந்தாய்வு நடைபெற வேண்டும் எனவும் தமிழகத்திற்கு விலக்கு அளிக்கப்பட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம் என நீட் தேர்வு எழுதிய சிபிஎஸ்சி மாணவர்கள் மற்றும் மாநில பாடத்திட்டத்தில் படித்த சில மாணவர்கள், தங்கள் பெற்றோர்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா  போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



நீட் தேர்வின் அடிப்படையில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் எனக் கோரி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் தங்கள் பெற்றோர்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் குறித்து அவர்கள் தெரிவித்ததாவது:-

தமிழக அரசு இந்த ஆண்டு மத்திய அரசிடம் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க டெல்லி வரை சென்று கோரிக்கை விடுத்து வந்துள்ளது. ஆனால், எங்களைப் போன்ற நீட்டுக்கு ஆதரவு கொடுக்கக் கூடிய மாணவர்களின் கருத்துக்களையும் இந்த அரசாங்கம் கேட்க வேண்டும். 



நீட் தேர்வுக்காக பல பயிற்சி வகுப்புகள் எடுத்து படித்துள்ளோம். தற்போது நீட் தேர்வில் இருந்து இந்த ஆண்டு தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற ஒருசிலரின் கருத்துகளை வைத்து பேசக்கூடாது.

நீட் தேர்வின் அடிப்படையில் அனைவரையும் தேர்வு செய்ய வேண்டும். உடனடியாக நீட் தேர்வின் அடிப்படையில் தரவரிசை பட்டியலை வெளியிட்டு கலந்தாய்வு நடத்த வேண்டும். தமிழகத்திற்கு விலக்கு அளிக்கப்பட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம்' என்றனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...