கோவை பீளமேட்டை அடுத்த காந்தி மாநகர் பகுதியைச் சேர்ந்தவர் மீனாட்சிசுந்தரம். இவரது மனைவி ஸ்ரீ அகிலா (35). இவர் கடந்த 13-ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு தனது குடும்பத்துடன் போத்தனூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். பின்னர் நேற்று மாலை வீட்டிற்கு திரும்பினார்.
அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும், உள்ளே சென்று பார்த்தபோது அலமாரியில் வைத்திருந்த தங்க நெக்லஸ், வளையல்கள் உட்பட 18 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
இது தொடர்பாக, ஸ்ரீ அகிலா பீளமேடு போலீசாரிடம் புகார் அளித்ததன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.