"பசியார சோறு" புதிய திட்டத்தின் மூலம் கோவையின் நட்சத்திரமான பள்ளி மாணவி


பொதுநலப் பணி என்பது ஒரு சமுதாய மக்களுக்கு மட்டும் உதவும் நோக்கில் செயல்படுத்துவது இல்லை. பொதுவாக, நம் சமூகத்தில் வசதியற்ற, உணவிற்கு ஏங்கும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு தன்னால் இயன்ற உதவிகளை வழங்குவதும் ஆகும்.

கோவையில் அரசு உயர்நிலைப் பள்ளியில் 9ஆம் வகுப்பு பயிலும், 13 வயது மாணவி தற்போது கோவையின் நட்சத்திரமாக ஒளிரத் துவங்கியுள்ளார். சுண்டக்காமுத்தூர் கிராமத்தில் "பசியார சோறு" என்னும்  ஒரு தன்னார்வ அமைப்பினை சுயமாக துவங்கி சக மாணவர்களிடமும், நண்பர்களிடமும் நிதியுதவி பெற்று இதனை செயல்படுத்தி வருகிறார் அந்த மாணவி.

குடிநீர் விநியோகிப்பாளர் மகளான நர்மதாவே இந்த மிகப்பெரிய சவாலை ஏற்று நடத்தி வரும் நம் கோவையின் நட்சத்திரம். அவரது தந்தையின் உதவி  மூலம் "பசியார சோறு" என்ற நல்ல செயலை செயல்படுத்தி வருகிறார். பலதரப்பட்ட மக்களின் பசியினை போக்கும் வகையில் இவரும், இவருடன் சிலரும் இணைந்து செயல்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, அரசு மருத்துவமனை, பிரசவ சிகிச்சை மையம் உள்ளிட்டவற்றில் உள்ள நோயாளிகளுக்கு, பெண்களுக்கு இவர் உணவு வழங்கி வருவது பாராட்டிற்குரியது.

இதில், அனைத்துத் தரப்பு மக்களுக்கும் மூன்று நேர உணவு வழங்க போதிய பணம் இல்லை. இதனால், "பசியார சோறு" நிறுவனர் ராஜ சேதுமுரளி, சில நல்லுள்ளம் கொண்டோரிடம் நிதியுதவி பெற்று இவருக்கு உதவி வருகிறார். 

நோபல் சர்வீஸ் குறித்து கேள்விப்பட்ட நர்மதா, தொடர்ந்து அதில் பங்களிக்கவும் முடிவு செய்தார். ஆரம்பத்தில், அவர் நண்பர்களிடமிருந்து பணத்தை சேகரித்துக் கொண்டிருந்தார். பள்ளி மாணவர்களிடம் இருந்து 1 மற்றும் 2 ரூபாய் மற்றும், அவரால் முடிந்த தொகை என மொத்தம் 150 ரூபாயினை மட்டுமே அவரால் சேகரிக்க முடிந்தது. பின், தனது பள்ளி ஆசிரியர்களிடமும் இதுகுறித்து விளக்கியதைத் தொடர்ந்து பிற வகுப்பு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் என நிதிவுதவி வழங்க முன்வந்து இறுதியாக 4862 ரூபாயினை சேகரித்தார் நர்மதா.

இது நர்மதாவின் சீறிய செயல்களை பாராட்ட மட்டுமல்ல. பெரியார் நகர், குளத்துப்பாளையம் அருகில் உள்ள செங்கல் கால்வாய் பகுதியில் சுதந்திர தின விழா கொண்டாட்டத்தின் போது நம் தேசியக் கொடியினை ஏற்ற தகுதிபடைத்த நர்மதா சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று தேசிய கொடியினை ஏற்றினார். அப்பகுதி மக்களால் நர்மதாவிற்கு இந்த மரியாதை வழங்கப்பட்டது.



"என்னை கவணித்துக் கொள்ள என் பெற்றோர்கள் உள்ளனர். ஆனால், பெற்றோர்களின்றி உணவின்று இச்சமூகத்தில் ஏராளமான குழந்தைகள் உள்ளனர். அவர்கள் தீபாவளி உள்ளிட்ட சிறப்பு நாட்களைக் கூட கொண்டாட வழியின்றி தவித்து வருகின்றனர். அத்தகைய குழந்தைகளைப் பற்றி எனது மாமா சேதுமுரளி என்னிடம் கூறினார். அவர்களுக்கு உதவ நான் விரும்புகிறேன். 

எனவே, முதலில் எனது நண்பர்களிடமிருந்து பணம் சேகரித்தேன். பின்னர் என் ஆசிரியர்களிடமும் மற்ற பள்ளி மாணவர்களிடமும் பணம் சேகரிதேன். நான் இதை மிகவும் சந்தோஷமாக கருதுகிறேன். அத்தகைய குழந்தைகளுக்கு உதவி செய்யத் தொடங்குகிறேன்" என்று அப்பாவிக்குரளில் கூறுகிறார் நர்மதா. மேலும், காவல்துறையில்  இணைந்து பிறருக்கு உதவ வேண்டும் என்பதும் எனது விருப்பம் என்கிறார் நர்மதா.



"நம் சமூகத்தில் உள்ள பல நர்மதாக்கள் இதுபோன்ற பொதுநல நோக்குடன் பிறருக்கு உதவ முன்வர வேண்டும். இத்தகைய தாழ்ந்த பின்னணியில் இருந்து மக்களுக்கு தொடர்ந்து உதவிவரும் நர்மதா நம்வாழ்வில்  முக்கிய முன்மாதிரியாகவே திகழ்கிறாள். மற்றவர்களுக்கு உதவ பணம் தேவையில்லை, அதை செய்ய இதயம் வேண்டும். "நாங்கள் நர்மதாவை மதிக்க வேண்டும் என்று விரும்பினோம். எனவே எங்கள் சுதந்திர தின விழாவில் தேசிய கொடியை ஏற்றும் படி நாங்கள் கேட்டுக்கொண்டோம்" என்கிறார் "பசியார சோறு"வின் ராஜா சேதுராமலிங்கம்.

Newsletter

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...