தெற்கு ரயில்வே சேலம் கோட்ட அலுவலகத்தில் இன்று (ஆகஸ்ட் 15) 71-வது சுதந்திர தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் ஹரிசங்கர் வர்மா மூவர்ணக்கொடியேற்றி வைத்து ரயில்வே பாதுகாப்புப் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

விழாவில், சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் ஹரிசங்கர் வர்மா, சுதந்திரம் பெற தியாகம் செய்தவர்களை நன்றியுடன் நினைவு கூர்ந்து அவர்களுக்கு மரியாதை செலுத்தினார். தெற்கு ரயில்வே பொது மேலாளர் வசிஷ்ட ஜோஹிரி சுதந்திர தின செய்தியை வாசித்தார். மேலும், அவர் பேசுகையில், வரும் ஆகஸ்ட் 19 அன்று மத்திய இரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு சேலம் ரயில்நிலையத்தின் இரண்டாவது நுழைவுவாயில் வரை நீட்டிக்கப்பட்டுள்ள நடை மேம்பாலம், சேலம் ரயில்நிலைய மேலாளர் அலுவலக அறை மற்றும் முக்கிய பிரமுகர்கள் அறை மற்றும் சாமல்பட்டி ரயில்நிலையத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள நடை மேம்பாலம் போன்றவற்றை காணொலிக்காட்சி மூலம் நாட்டிற்கு அர்ப்பணிக்க உள்ளதாக தெரிவித்தார்.

சேலம் கோட்டத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் தூய்மையை மேம்படுத்தும் பொருட்டு ஆகஸ்ட் 16 முதல் ஆகஸ்ட் 31 வரை தூய்மை இருவார விழிப்புணர்வு மேம்பாட்டு நிகழ்ச்சி நடத்தப்பட இருப்பதாகவும், அத்தருணத்தில் பல்வேறு விழிப்புணர்வு மற்றும் தூய்மை மேம்பாட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளதாகவும் கூறினார்.
கோவை ரயில் நிலையத்தில் ரயில் பயணிகளை அதிக கட்டணம் செலுத்துவதில் இருந்து காக்க துவக்கப்பட்ட செயலி அடிப்படையிலான வாடகைக்கார் முன்பதிவு செய்யும் வசதி பெரும் வரவேற்பை பெற்றிருப்பதாகவும், இந்த வசதி சேலம் கோட்டத்தின் இதர ரயில் நிலையங்களுக்கும் விரிவு படுத்தப்படும் என்றும் கூறினார்.

இதனைத்தொடர்ந்து, ரயில்வே பாதுகாப்பு படையின் மோப்பநாய்ப்படை சாகசம், சேலம் மற்றும் ஈரோடு ரயில்வே பள்ளிகளின் மாணவ மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் போன்றவை நடைபெற்றன. விழாவில், சேலம் கோட்ட கூடுதல் ரயில்வே மேலாளர் சந்திரபால், கோட்ட ரயில்வே பாதுகாப்புப் படை ஆணையர் பொன்ராஜ் மற்றும் இதர கோட்ட அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர் பெரும் எண்ணிக்கையில் கலந்து கொண்டனர்.