கோவை மாநகராட்சியில் நடைபெற்ற 71-வது சுதந்திர தின விழாவில் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தேசியக்கொடியை ஏற்றி வைத்து அப்பழுக்கின்றி பணியாற்றிய பணியாளர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினார்.
கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று (ஆகஸ்ட் 15) 71-வது சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் கலந்துகொண்டு தேசியக்கொடி ஏற்றி வைத்தார்.
முன்னதாக அண்ணல் காந்தியடிகளின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இவ்விழாவில் கோவை மாநகராட்சியில் 25 ஆண்டுகள் அப்பழுக்கின்றி பணியாற்றிய 14 பணியாளர்களுக்கு தலா ரூ.2,000 வெகுமதி தொகையும் நற்சான்றிதழ்களையும் வழங்கினார்.

இவ்விழாவில் ஆர்.எஸ்.புரம் எஸ்.ஆர்.பி.அம்மணியம்மாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் ஆர்.எஸ்.புரம் மேற்கு பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவிகளின் சிறப்பான கலை நிகழ்ச்சிகளும், மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மற்றும் துவக்கப்பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவியர்களின் களரி விளையாட்டு மற்றும் பிற வீரசாகச நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

இவ்விழாவில் துணை ஆணையர் ப.காந்திமதி, மாநகராட்சி அலுவலர்கள், மாநகராட்சி பணியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.