தமிழக ஊராட்சிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யாததால் வளர்ச்சி பணிகள் பாதிப்பு- தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் புகார்

தமிழகத்தில் உள்ள 4 ஆயிரம் ஊராட்சிகளுக்கு 6 மாதங்களாக நிதி ஒதுக்கீடு செய்யாததால் வளர்ச்சி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் புகார் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகேயுள்ள ஒரு விடுதியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 2 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அச்சங்கத்தின் மாநில தலைவர் சுப்பிரமணியம் கூறுகையில், தமிழகத்தில் உள்ள 4 ஆயிரம் ஊராட்சிகளுக்கு 6 மாதங்களாக நிதி ஒதுக்கீடு செய்யாததால் வளர்ச்சி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. ஊராட்சிகளுக்கு தரமற்ற குளோரின் மாத்திரைகள் வழங்கப்பட்டு உள்ளது. எல்.இ.டி பல்புகள் கூடுதல் விலைக்கு வாங்கப்பட்டுள்ளது. இவற்றில் ஊழல் முறைகேடுகளும் நடந்துள்ளது. 

ஊழல் முறைகேடுகளுக்கு காரணமான ஊரக வளர்ச்சித்துறை இயக்குநர் பாஸ்கரன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வருகின்ற 29-ம் தேதி கருப்புப்பட்டை அணிந்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை இரத்து செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜக்டோ, ஜியோ அமைப்பு சார்பில் நடத்தும் போராட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தினர் 30 ஆயிரம் பேர் பங்கேற்பர்.

இவ்வாறு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாநிலத் தலைவர் சுப்பிரமணியம் பேட்டியளித்தார்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...