நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு மூன்று ஆண்டுகள் விலக்கு என்ற கோரிக்கை ஏற்றுக்கொள்ள முடியாது- பொன்.ராதாகிருஷ்ணன்

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு மூன்று ஆண்டுகள் விலக்கு என்ற கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்கு கேட்கும் அரசியல் கட்சிகள், நிரந்தரமாக தமிழக மாணவர்கள் அழிய வேண்டும் என நினைப்பதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

கோவை கொடிசியா பகுதியில் உள்ள இஸ்கான் கோவிலில் நடைபெற்ற கிருஷ்ண ஜெயந்தி நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் பேட்டியளிக்கையில் கூறியதாவது:-



பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷாவின் தமிழக வருகை தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தும். தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து ஓராண்டு விலக்கு கிடைக்க வாய்ப்பு அதிகம் உள்ளது. அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு இடங்களுக்கு மட்டும் தான் நீட் தேர்வில் இருந்து விலக்கு கொடுக்கிறோம்.

90 சதவிகிதம் அதிகமான மாநில பாடத் திட்டம் மாணவர்களுக்கு அவர்களின் விருப்பத்தின் அடிப்படையில் இந்த நிலை எடுத்துள்ளோம். மாநில பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்கள் உலக அளவு தகுதி நிறைந்தவர்களாக மாற்ற வேண்டியது அரசின் கடமை. அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வரும் அமைச்சர் செங்கோட்டையனுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால், மூன்று ஆண்டுகள் தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு வேண்டும் என்ற அமைச்சர் செங்கோட்டையனின் கோரிக்கை ஏற்றுக்கொள்ள முடியாது. மேலும் மூன்று ஆண்டுகள் விலக்கு கேட்பதில் அர்தமில்லை.

நிரந்தரமாக நீட் தேர்வில் இருந்து விலக்கு கேட்கும் அரசியல் கட்சிகள், நிரந்தரமாக தமிழக மாணவர்கள் அழிய வேண்டும் என நினைப்பதாக கருதுகிறேன் என்றார்.

இதனைத்தொடர்ந்து, தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டால் வழக்கு தொடர இருப்பதாக நளினி சிதம்பரம் கூறியுள்ளது தொடர்பான செய்தியாளர் கேள்விக்கு, நகைச்சுவை போல காங்கிரஸ் கட்சியினர் மாறி மாறி பேசுகின்றனர். இது அரசியல் சித்து விளையாட்டு என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...