3-வது தேசிய கைத்தறி தினத்தையொட்டி கைத்தறி கண்காட்சியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார்

கோயம்புத்தூர் மாவட்டம் தேவாங்கர் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு அரசு கைத்தறி மற்றும் துணிநூல் துறை மூலம் இன்று  மூன்றாவது தேசிய கைத்தறி மற்றும் துணிநூல் கண்காட்சி துவக்க விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முதல் விற்பனையை துவங்கி வைத்து 16 பயனாளிகளுக்கு ரூ.11.01 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.



பின்னர், நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் 1905-ம் ஆண்டு கொல்கத்தா டவுன் ஹாலில் ஆகஸ்ட் திங்கள் 7-ம் நாள் நடைபெற்ற கூட்டத்தில் அன்னிய பொருட்கள் மறுப்பு மற்றும் சுதேசி இயக்கம் குறித்தான பிரகடனம் வெளியிடப்படதனை நினைவுகூறும் விதமாக ஆகஸ்ட் 7-ம் நாளினாது தேசிய கைத்தறி தினமாக இந்திய அரசால் அறிவிக்கப்பட்டு கடந்த 07.08.2015 அன்று பாரத பிரதமர் சென்னையில் முதல் கைத்தறி தினம் கொண்டாடப்பட்டது. அதனைத் தொடாந்து 07.08.2016 அன்று வாரனாசியில் 2-வது கைத்தறி தினமுன கொண்டாடப்பட்டது. 3-வது தேசிய கைத்தறி தினம் தேசம் முழுவதும் வரும் 07.08.2017 அன்றும் கொண்டாடப்பட்டது. 

கோவை மாநகரில் தமிழ்நாடு அரசு கைத்தறி மற்றும் துணிநூல் துறை தேவாங்களர் திருமண மண்டபம், பூ மார்க்கெட் பகுதியில் 3-வது தேசிய கைத்தறி தினத்தினை முன்னிட்டு மாவட்ட அளவிலான கைத்தறி கண்காட்சி இன்று 12.08.2017 முதல் 14.08.2017 முடிய 3 நாட்கள் நடைபெறுகிறது. இக்கண்காட்சி திடலில் புதிய வடிவமைப்புகளி;ல் கோவை கோரா காட்டன் திருப்பூர், சிறுமுகை காட்டன் மற்றும் பட்டு சேலை இரகங்கள், நெகமம் காட்டன் சேலைகள், சென்னிமலை பெட்சீட்ட்கள், படுக்கை விரிப்புகள், தலையாணை உறைகள், துண்டு இரகங்கள, கடலூர் லுங்கி வகைகள், மதுரை, திண்டுக்கல், சுங்குடி சேலைகள் உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களை சார்ந்த கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உற்பத்தி செய்யப்பட்ட கைத்தறி ஜவுளிகள் ஒரே இடத்தில் உற்பத்தி விலைக்கே தமிழக அரசின 20% தள்ளுபடியுடன் இன்று 12.08.2017 முதல் 14.08.2017 வரை 3 தினங்களுக்கு விற்பனை செய்யப்பட உள்ளது. 



இதனால், வாடிக்கையாளர்களுக்கு அனைத்து தரமான கைத்தறி ஜவுளிகளை ஒரே இடத்தில் கொள்முதல் செய்து கொள்ள வாய்ப்பு உள்ளது. இன்று (12.08.2017) முதல் 14.08.2017 முடிய நடைபெறவுள்ள தேசிய கைத்தறி தின கைத்தறி கண்காட்சியில் ரூ.20.00 இலட்சம் விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இக்கண்காட்சிக்கு நுழைவு கட்டணம் இல்லை. ஆகவே, பொதுமக்கள் அனைவரும் வருகைதந்து பயன்பெற்று கொள்ள வேண்டும் எனவும், அம்மாவின் அரசு எல்லாகாலங்களிலும், எச்சூழ்நிலைகளிலும் நெசவாளர்களுக்கு உற்ற அரணாக இருந்து வருகின்றது. உதாரணமாக மத்திய சரக்கு மற்றும் சேவை வரியும் கூட 18 சதவிகிதம் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. தமிழக முதலமைச்சர் அவர்கள் நெசவாளர்களின் வாழ்வாதாரத்தினை கருத்தில் கொண்டு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் தற்சமயம் 5 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்ததார்.

இந்நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர் வீ.சி.ஆறுகுட்டி, மாவட்ட வருவாய் அலுவலர் துரை.ரவிச்சந்திரன், கோ-ஆப்டெக்ஸ் தலைவர் கே.வீ.மனோகரன், கோவை-திருப்பூர் நெசவாளர் கூட்டுறவு சங்க சம்மேளனங்களின் தலைவர் ஜகநாதன், உதவி இயக்குநர் (கைத்தறி மற்றும் துணிநூல் துறை) திரு.சாமிநாதன், கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் நடராஜ், மற்றும் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...