எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு உதகையில் படகு போட்டி

உதகை படகு இல்லத்தில் தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக அவர் நடித்த “படகோட்டி” திரைப்பட மாதிரியில் வேடமணிந்து நடைபெற்ற படகு போட்டியினை இன்று மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்தார்.



அதனைத் தொடர்ந்து, “நீலகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் உபயோகத்தைத் தவிர்க்கும்பொருட்டு, மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருகட்டமாக பிளாஸ்டிக் பயன்பாட்டினை முற்றிலுமாக ஒழிக்க பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், 24 பேர் அடங்கிய 2 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு பணியாணை வழங்கப்பட்டது.



இவர்களில் 12 பேர் கொண்ட ஒரு குழுவிற்கு உதகை படகு இல்லத்திலும், 12 பேர் கொண்ட மற்றொரு குழுவிற்கு உதகை தாவரவியல் பூங்காவில் பணிபுரிய பணியாணை வழங்கப்பட்டுள்ளது. இவர்களின் முக்கிய பணி படகு இல்லத்திற்கும், தாவரவியல் பூங்காவிற்கும் வருகைத்தரும் சுற்றுலா பயணிகளிடம் பிளாஸ்டிக் இல்லா நீலகிரி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதலும், அவர்கள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின்மீது வண்ண ஸ்டிக்கர்கள் ஒட்டி அதற்கான தொகை ரூ.10 சுற்றுலா பயணிகளிடம் வசூலிக்கப்படுவதாகும். அச்சுற்றுலா பயணிகள் திரும்ப வரும்போது வண்ண ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை மீள ஒப்படைக்கப்படும்போது வசூலிக்கப்பட்ட ரூ.10 சம்பந்தப்பட்ட சுற்றுலா பயணிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

அதுமட்டுமன்றி மாவட்டத்தின் 8 சோதனைச் சாவடிகளில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, நாள்தோறும் பிளாஸ்டிக் கொண்டு வரும் சுற்றுலா பயணிகளிடம் எல்லைகளிலே தடுத்தி நிறுத்தி அபராதம் விதிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் மாவட்டத்திற்குள் பிளாஸ்டிக் பயன்பாட்டினை அறவே ஒழிக்க முடியும்.

இந்நிகழ்ச்சியில் மகளிர் திட்ட அலுவலர் ரேணுகாதேவி, சுற்றுலாத்துறை அலுவலர் ராஜன், சுற்றுலா வழிகாட்டியினர் மற்றும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...