வங்கி தொடர் விடுமுறையால் சில்லறை தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை- கோவை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தலைமை மேலாளர்



வருகிற 12ம் தேதி (நாளை) இரண்டாவது சனிக்கிழமை, 13-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, 14-ம் தேதி திங்கட்கிழமை கிருஷ்ண ஜெயந்தி, 15-ம் தேதி செவ்வாய்க் கிழமை சுதந்திர தினம் என தொடர்ச்சியாக 4 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை நாட்கள் வருகிறது. இந்த நான்கு நாட்கள் வங்கியில் தொடர் விடுமுறையை அடுத்து பண பரிவர்த்தனை குறித்து கோவை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தலைமை மேலாளர் ராமகிருஷ்ணன் கூறியதாவது:-

பொதுமக்கள் தற்போது ஆன்லைன் மூலம் பண பரிவர்த்தனை மற்றும் பணம் பரிமாற்றம் செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது சமுதாயத்தில் படித்தவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருப்பதால் அவர்கள் வங்கிக்கு வருவதை பெரும்பாலும் தவிர்கின்றனர். 

மாறாக, ஆன்லைன் மற்றும் அனைத்து வங்கிகள் மூலமாகவும் டெபாசிட் மெஷின்கள் பொதுமக்கள் அதிகம் கூடும் முக்கிய இடங்களில் வைத்திருப்பதால், பொதுமக்கள் அங்கே சென்று பண பரிவர்த்தனை செய்து கொள்கின்றனர். இதில், பாமர மக்களில் ஒரு சிலர் மட்டுமே வங்கிக்கு சென்று பணம் பரிவர்த்தனை செய்து வருகின்றனர்.



மேலும், இதுபோன்ற பாமர மக்களுக்கு வங்கிகள் மூலமாகவும் பண பரிவத்தனை எவ்வாறு செய்யலாம் என்பது குறித்து விழிப்புணர்வும் கொடுக்கின்றோம்.

பொதுவாக, இதுபோன்ற தொடர் விடுமுறைகளின் போது பொதுமக்களுக்கு அவசர காலங்களில் சுலப முறையில் பணம் எடுக்கும் வகையில் ஏ.டி.எம் மெஷின்களில் அதிக அளவில் பணம் நிரப்பப்படும். 

ஏ.டி.எம்-களில் ஒரு நாட்களில் ரூபாய் 20,000 வரை ஒரு நபர் எடுத்துக்கொள்ளலாம். அதேபோல், 500, 2000 மற்றும் 100 ரூபாய் நோட்டுக்கள் ஏ.டி.எம் மெஷின்களில் வைத்திருப்பதால், ஒருநபர் 2000 ரூபாயினை எடுக்கும் பொழுது மக்களுக்கு சிரமமின்றி அவை சில்லரை முறையில் 100 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்களாகவும் கிடைக்கும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இதனால் சில்லறை தட்டுப்பாடு பொதுமக்களுக்கு இருக்க வாய்ப்பில்லை.

இவ்வாறு கோவை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தலைமை மேலாளர் கூறினார்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...