கோவையை மையமாகக் கொண்டு ஆன்லைன் மூலம் செய்திகளை உடனுக்குடன் வழங்கி வரும் சிம்ப்ளிசிட்டி தற்போது டெங்கு காய்ச்சல் குறித்தான மருத்துவ ஆலோசனைகளை வழங்கும் நோக்கில் ஐகிளீனிக் உடன் கைகோர்த்துள்ளது.
கோவை மாவட்டத்தில் தற்போது டெங்கு காய்ச்சல் நோய் வேகமாகப் பரவிவருவதைத் தொடர்ந்து அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நாளுக்கு நாள் ஏராளமானோர் இந்நோயினால் பாதிக்கப்படுவோர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
டெங்கு காய்ச்சலின் அறிகுறிகளைக் கொண்டு இரத்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பின்பே இந்நோய் உறுதி செய்யப்படுகிறது. இதில், நோய் தாக்கத்தின் தன்மையைப் பொறுத்து, மருத்துவர்கள் சிகிச்சைகள் வழங்கி வருகின்றனர்.
டெங்கு காய்ச்சலைப் பற்றி பயப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றாலும், அலட்சியப்போக்குடன் செயல்படக் கூடாது. கவனக்குறைவே உயிருக்கு ஆபத்தானது. எனவே, நோயால் பாதிக்கப்பட்டவர்கள், அறிகுறிகள் தென்படுவோர் இதுகுறித்தான ஆலோசனைகளைப் பெற சிம்ப்ளிசிட்டி வாயிலாக ஐகிளீனிக் சேவையைப் பயன்படுத்தலாம். மற்றும் புகழ்பெற்ற மருத்துவர்களுடன் தொடர்பு கொள்ளலாம்.
இதுகுறித்து மேலும் தகவல் மற்றும் பயனடைய https://goo.gl/BEP69D என்ற இணையதள முகவரியினுள் சென்று கூப்பன் குறியீடான DengueSimplicity -யை பயன்படுத்தவும்.
உங்களது கேள்விகளுக்கு உடனடி பதில்கள் மற்றும் பரிந்துரைகளை வழங்க 50-க்கும் மேற்பட்ட டெங்கு நிபுணர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களின் குழு காத்திருக்கின்றன.
இந்த சேவை 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை முற்றிலும் இலவசம்.