பச்சிளங்குழந்தைகளுக்கு சிகிச்சை அளிப்பதில் உள்ள நுணுக்கங்கள் மற்றும் குழந்தை இறப்பு விகிதத்தை குறைக்கும் வகையில் மருத்துவர்களுக்கான 42-வது மாநாடு கோவை கொடிசியா அரங்கத்தில் வரும் 11-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை நடைபெறுகிறது.
இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று கோவை அரசு மருத்துவமனையில் நடைபெற்றது. அப்போது, குழந்தைகள் நல பிரிவு மருத்துவர் புமா செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் குழந்தைகளின் இறப்பு விகிதம் 25 சதவிகதமாக இருந்தது. தற்போது, 15-20 சதவிகிதமாக குறைந்துள்ளது. இரு நாட்டில் மருத்துவத்துறை எவ்வாறு வளர்ச்சியடைந்துள்ளது என்பதை குழந்தைகளின் இறப்பு விகிதத்தை கொண்டு கணக்கிட முடியும்.

இந்தியாவில், கேரள மாநிலத்தில் தான் குழந்தைகள் இறப்பு விகிதம் குறைவு, இரண்டாவது இடத்தில் தமிழகம் உள்ளது.
தற்போது கோவையில், குழந்தைகள் நல மருத்துவர்களுக்கான 42-வது மாநாடு நடைபெற உள்ளது. கொடிசியா அரங்கில் நடைபெறும் இந்த மாநாடு 11-ம் தேதி தொடங்கி மூன்று நாட்கள் நடைபெற உள்ளது.
இதில் தமிழ்நாடு கேரளா மற்றும், கர்நாடகாவை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் நல மருத்துவ நிபுணர்கள் கலந்துகொள்கின்றனர்.
மாநாட்டில், குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும் நுணுக்கங்கள், மற்றும் பல்வேறு வைரஸ் காய்ச்சல்கள் மற்றும் குழந்தைகளை தாக்கும் நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் முறைகள் குறித்து கருத்தரங்கு நடைபெற உள்ளது.
இந்த கருத்தரங்கின் மூலமாக குழந்தைகள் இறப்பு விகிதத்தை குறைக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.