சுகாதார துப்புரவுப் பணியாளர்களுக்கு ஒப்பந்தப்படி ஊதியம் வழங்கக் கோரி ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கம் மனு

நகராட்சி ஒப்பந்த சுகாதார துப்புரவுப் பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவுப் படி ஊதியம் வழங்கக் கோரி கோவை மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கம் (சிஐடியு) சார்பில் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.



இதுகுறித்து கோவை மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கம் (சிஐடியு) மாவட்ட பொதுச் செயலாளர் கே.ரத்தினகுமார், ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் 151 தொழிலாளர்கள் சுகாதார துப்புரவுப் பணியில் கடந்த 6 ஆண்டுகளாக ஈடுபட்டு வருகின்றனர். மேற்கண்ட தொழிலாளர்களுக்கு மாவட்ட ஆட்சியரால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்படி ஊதியம் வழங்குவது இல்லை. மாறாக ஆண்களுக்கு ரூ.220 மற்றும் பெண்களுக்கு ரூ.180 என்ற அடிப்படையில் இரண்டு விதமான ஊதியம் ஒப்பந்ததாரரால் வழங்கப்பட்டு வருகிறது. இதுவும் வங்கி மூலம் வழங்குவது இல்லை. மாறாக நேரடியாக வழங்கப்படுகிறது.

2016- 2017 ஆம் ஆண்டிற்கு குறைந்தபட்ச ஊதியமாக துப்புரவு பணியாளர்களுக்கு தினக்கூலி ரூ.300 வழங்க வேண்டும் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதை இன்றைய தேதி வரையில் மேற்கண்ட பணியாளர்களுக்கு அமல்படுத்தப்படவில்லை. 

எனவே, இதன் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு ஆட்சியர் உத்தரவுப்படி அனைவருக்கும் ஒரே மாதிரியான ஊதியம் ரூ.300 வழங்க வேண்டும்.

இவ்வாறு அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...