துடியலூர் பகுதியில் அருந்ததியர் மக்களுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்கக் கோரி தமிழ்புலிகள் அமைப்பினர் ஆட்சியரிடம் மனு

துடியலூர் பகுதியில் அருந்ததியர் மக்களுக்கு வீட்டு மனைப் பட்டா வழங்க வேண்டும். மின்சார வசதி ஏற்படுத்த வேண்டும். தனியார் ஆக்கிரமிப்பில் உள்ள நிலங்களை மீட்க வேண்டும் என தமிழ்புலிகள் அமைப்பின் சார்பில் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.



இதுகுறித்து தமிழ்புலிகள் அமைப்பின் மாநகர மாவட்ட செயலாளர் தம்பி வினோத் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-

பெரியநாய்க்கன்பாளையம் ஒன்றியம், புதுபுதூர் எம்ஜிஆர் நகர் பகுதியில் சுமார் 35 ஆண்டுகளாக சுமார் 40 அருந்ததியர் மக்கள் குடும்பங்கள் வீடுகட்டி வசித்து வருகின்றனர். மேற்படி மக்கள் வசிக்கும் வீடுகளுக்கு வீட்டு மனைப் பட்டா, மின்சார வசதி, கழிப்பிட வசதி, சாலை வசதி உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படாமலேயே உள்ளது.



மேலும், இந்த ஊரின் தென்புறமும், வடபுறமும் சுமார் 10 செண்ட் அளவிற்கு தனியார்கள் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் இருமுறை மனு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரையிலும் இம்மக்களுக்கு அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு வருகிறது. 

எனவே, கோவை மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு மேற்குறிப்பிட்ட மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்துதர வேண்டும்' என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...