சீனாவில் தயாரிக்கப்படும் பொருட்கள் இந்திய சந்தைகளில் இடம்பிடிக்கும் போது இந்திய பொருட்களின் வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்படுகிறது. இதனை தடுக்க வேண்டும் என்று கோரியும், இந்திய வர்த்தகத்தை ஊக்குவிப்பது, வந்தே மாதரத்தை கட்டாயமாக்குவது மற்றும் இந்து இயக்கத்தலைவர்களுக்கு பாதுக்காப்பு அளிப்பது தொடர்பான ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இன்று மாலை இந்து மக்கள் கட்சியினை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம் ஈடுபட்டனர்.

பீளமேடு ஆர்.டி.ஓ. அலுவலகம் முன்பு நடந்த இந்த போராட்டத்தில் இந்து மக்கள் கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் தலைமையில் 180 பேர்கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தொடர்ந்து, அங்கு வந்த போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து மக்கள் கட்சியினரை கைது செய்தனர்.