உயிரோடு இருப்பவரை இறந்ததாக கூறி பேஸ்புக்-ல் வதந்தி பரப்பியவர் கைது

உயிரோடு இருக்கும் ஒருவரை இறந்ததாக கூறி பேஸ்புக்-ல் வதந்தி பரப்பியவரை கோவை மாநகர போலீசார் கைது செய்துள்ளனர். 

கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ரவி. அதே பகுதியில் மருந்துக்கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில், கோவையில் நடைபெற்ற விபத்து ஒன்றில் ரவி மரணமடைந்ததாகவும், அவரது மகள் காணாமல் போனதாகவும் பேஸ்புக்கில் தகவல் பரவியது. நடிகர் கமலஹாசன் பெயரில் தொடங்கப்பட அந்த பேஸ்புக் பக்கத்தில் இவ்வாறு பதிவு செய்யப்பட்டதோடு, சிறுமியை கண்டுபிடித்து தருபவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. 

இதை தொடர்ந்து, ரவி-யின் உறவினர்கள், நண்பர்கள் என பலரும் அவரது வீட்டிற்கு சென்று விசாரித்தனர். அப்போது தான் தன்னைபற்றி வதந்தி பரப்பப்பட்டுள்ளதை ரவி அறிந்தார். இது குறித்து, ரவி அளித்த புகாரின்பேரில் கோவை சைபர் க்ரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

விசாரணையில் உக்கடம் பகுதியைச் சேர்ந்த மன்சூர் அலி என்ற நில புரோக்கர் கமலஹாசன் பெயரில் பேஸ்புக் பக்கம் தொடங்கி அதில் ரவி குறித்து தவறான தகவல் பரப்பியது தெரியவந்தது. தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். 

அப்போது, கடந்த சில நாட்களுக்கு முன்னர் ரவிக்கு தான் இடம் வாங்கி கொடுத்ததாகவும்.  கமிஷன் வழங்குவதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும், எனவே ரவி-யை பழிவாங்குவதற்காக இவ்வாறு வதந்தி பரப்பியதாக மன்சூர் அலி தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, அவர் நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்.

Newsletter

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...

நாளை பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு!

தமிழ்நாட்டில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (மே 8) காலை 9.30 மணிக்கு வெளியாகும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்...

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...