கோவை மாவட்ட விடுதிகள் அரசு நெறிமுறை சான்று பெற ஆட்சியர் அழைப்பு


கோவை மாவட்டத்தில் விடுதிகளில் தங்கி பணிபுரியும் அல்லது கல்வி பயிலும் பெண்கள், வளர் இளம் பெண்கள், பெண் குழந்தைகள் மற்றும் சிறார் இல்லங்கள் அரசு வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி (உள்ளுறைவோர்களின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு நலனுக்கு அரசு வழிகாட்டி நெறிமுறைகள் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஒழுங்குமுறைச் சட்டம் 2014)-யின் கீழ் பதிவு செய்து சான்று பெற்றிட ஏற்கனவே அழைப்பு விடப்பட்டிருந்தது.

அதில் பதிவு செய்யாதவர்களுக்கென வாய்ப்பளிக்கும் வகையில் மீண்டும் பதிவு செய்திட கால அவகாசம் வழங்கப்படுகிறது. இதுபோன்று கோவை மாவட்டத்தில் செயல்படும் விடுதிகள், பதிவு செய்வதற்கான விண்ணப்ப படிவம் கோவை மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் பழைய கட்டிடம், தரைத்தளம், கோவை - 18 என்ற முகவரியில் நேரில் பெற்று வரும் ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும், இதில் பதிவு செய்ய கருத்துரு சமர்ப்பிக்காத அனைத்து விடுதிகளின் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கோவை மாவட்ட ஆட்சியர் வேளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...