கோவையில் தனது இரண்டாவது ஸ்டோரைத் திறந்தது லைஃப்ஸ்டைல்

இந்தியாவின் மிகவும் விரும்பத்தக்க ஃபேஷன் இடமான லைஃப்ஸ்டைல், கோவையில் தனது புதிய ஸ்டோரை கோவை, பழைய சிவானந்தா மில்ஸ் பகுதியில் அமைந்துள்ள புரோசோன் மாலில் திறந்துள்ளது.



இந்த ஸ்டோரை லைஃப்ஸ்டைல் மார்க்கெட்டிங் பிரிவின் மூத்த துணைத் தலைவர் ஸ்ரீனிவாச ராவ் மற்றும் சில்லரைச் செயல்பாடுகள் தலைவர் சத்யநாராயணன் ஆகியோருடன் புகழ்பெற்ற நடிகை ரெஜினா காஸெண்ட்ரா திறந்து வைத்தார். இது கோவையில் லைஃப்ஸ்டைலின் இரண்டாவது மற்றும் நாட்டின் 62-வது ஸ்டோராகும்.



இதுகுறித்து லைஃப்ஸ்டைல் இண்டர்நெஷனல் (பி) லிமிடெட்டின் நிர்வாக இயக்குநர் கபீர் லும்பா தெரிவிக்கையில், எங்களது முதல் ஸ்டோருக்கு கிடைத்த பெரும் வரவேற்பைத் தொடர்ந்து கோவையில் எங்களது செயல்பாடுகளை விரிவுபடுத்துவதில் நாங்கள் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம். புரோசோன் மாலில் எங்களது இரண்டாவது ஸ்டோருடன் நாங்கள் தொடர்ந்து தனித்துவமான ஃபேஷன் விருப்பங்களைப் பூர்த்தி செய்யும் வகையில் குறிப்பிடத்தக்க பொருட்கள் பட்டியல் ஆகியவற்றை அளிப்போம்" என்றார்.



நடிகை ரெஜினா காஸண்ட்ரா கூறுகையில், மிகுந்த துடிப்புமிக்க நகரமான கோவையில் லைஃப்ஸ்டைல் ஸ்டோரைத் திறப்பதில் உற்சாகம் அடைகிறேன். லைஃப்ஸ்டைல் என்பது எனது அனைத்து ஃபேஷன் தேவைகளுக்கு செல்லவேண்டிய ஃபேஷன் இடமாக உள்ளது. நவீன ஃபார்மல், கேஷ்வல் ஆடைகள், உபகரணங்கள் அவர்களது டிரெண்டியான பொருட்கள் தொடங்கி நவீன ஆடைகள் வரை அனைத்தையும் நான் மிகவும் விரும்புகிறேன்" என்றார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...