உதகை ஊராட்சிப் பகுதிகளில் தூய்மை பாரத இயக்க விழிப்புணர்வு முகாம்

நீலகிரி மாவட்டம், உதகை ஊராட்சிக்குட்பட்ட உல்லத்தி, எப்பநாடு (ம) அஜ்ஜுர் பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா தலைமையில் நடைபெற்ற தூய்மை பாரத இயக்க விழிப்புணர்வு முகாமில், 81 பயனாளிகளுக்கு, கழிப்பறை கட்ட ரூ.4 லட்சத்து 5 ஆயிரம் மதிப்பீட்டிலான காசோலைகளை வழங்கினார்.

உதகை ஊராட்சிக்குட்பட்ட உல்லத்தி, எப்பநாடு (ம) அஜ்ஜுர் பகுதிகளில் இன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற தூய்மை பாரத இயக்க விழிப்புணர்வு முகாமில், 61 மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்களுக்கு தனிநபர் இல்லக் கழிப்பறைக் கட்ட ரூ.3 லட்சத்து 5 ஆயிரத்திற்கான காசோலையினையும், 20 தனிநபர்களுக்கு தனிநபர் இல்லக் கழிப்பறை கட்ட ரூ.1 லட்சம் மதிப்பீட்டிலான காசோலைகளையும் வழங்கினார்.

காசோலைகளை வழங்கி மாவட்ட ஆட்சியர் பேசியதாவது, “இத்தூய்மை பாரத இயக்க விழிப்புணர்வின் நோக்கமே, திறந்த வெளியில் மலம் கழித்தல் இல்லாத மாவட்டமாக, நீலகிரி மாவட்டத்தினை உருவாக்குதல்தான். ஏனெனில் திறந்த வெளியில் மலம் கழித்தால், சுற்றுப்புறச் சூழல் மாசுபடுவதோடு மட்டுமல்லாமல், தொற்றுநோயாக நம்மையும், நம் சமூகத்திற்கும் பாதிப்பினை ஏற்படுத்தும்.

எனவே அனைத்து பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்கி தனிநபர் இல்லக்கழிப்பிடத்தினை பயன்படுத்தி சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.” என்றார். 

முன்னதாக, உல்லத்தி ஊராட்சிக்குட்பட்ட அழகர்மலையில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின்கீழ், 10 பயனாளிகளுக்கு தலா ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் வீதம் ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் தொகுப்பு வீடுகளை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் விரைந்து பணிகளை முடித்து பயனாளிகளின் பயன்பாட்டிற்கு கொண்டுவருமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

எப்பநாடு ஊராட்சியில் செயல்பட்டு வரும் நியாய விலைக் கடையினை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர், கடையிலுள்ள பொருட்களின் இருப்பினையும், தரத்தினையும் ஆய்வு செய்தார்.

இந்நிகழ்ச்சிகளில் மகளிர் மேம்பாட்டுத்திட்ட இயக்குநர் ரேணுகா தேவி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் முருகேசன், செயற்பொறியாளர் பசுபதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...