கோவை மாநகராட்சியில் 80 சதவிகித சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை - எம்.எல்.ஏ. நா.கார்த்திக் பேட்டி

கோவை மாவட்டம் முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகின்றது. கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவை மற்றும் திருப்பூரை சேர்ந்த 3 பேர் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகினர். 

இந்நிலையில், சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் கோவை அரசு மருத்துவமனையில் இன்று காலை திடீர் ஆய்வு மேற்கொண்டார். மேலும், அரசு மருத்துவமனையின் முதல்வர் அசோகன் மற்றும் மருத்துவர்களிடம் அலோசனை நடத்தினர்.



தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- 

கோவை மாநகராட்சியை பொறுத்தவரை சுகாதாரம் சீர்கெட்டுள்ளது. இதனால் காய்ச்சல் வேகமாக பரவி வருகின்றது. பக்கத்து மாநிலத்திலிருந்து அதிகளவிலான டெங்கு பரவ வாய்ப்புள்ளது. பொள்ளாச்சியையொட்டியுள்ள கிராம பகுதிகளில் அதிகளவில் டெங்கு பரவுவதாக தகவல் கிடைத்துள்ளது.

இதனால், தனியார் மருத்துவமனைகளையும், தொண்டு நிறுவனங்களையும் அழைத்து விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தியுள்ளோம்.



கோவை மாநகராட்சியை பொறுத்தவரை குப்பைகள் அகற்றப்படாமலும், சாக்கடை கழிவுகள் தூர்வாரப்படாத நிலையே உள்ளது. கோவை மாவட்டத்தின் உள்ளாட்சி பகுதிகளில் 100-க்கு 80 சதவிகித சுகாதார பணிகள் மேற்கொள்ளப்படுவதில்லை.

போர்க்கால அடிப்படையில் உள்ளாட்சித்துறையும், சுகாதாரத்துறையும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். டெங்கு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்' என்றார்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...