கோவைக்கு நிலநடுக்க பாதிப்பு!: ஆய்வாளர்கள் கூறுவது என்ன?

நாடு முழுவதிலும் 29 நகரங்களில் எப்போது வேண்டுமானாலும் நிலநடுக்கம் ஏற்படக்கூடும் என்று 'என்.சி.எஸ்' எனப்படும் தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதில், புதுச்சேரி, தில்லி, பாட்னா, ஸ்ரீநகர், கோஹிமா, கவுகாத்தி, காங்டாக், சிம்லா, டேராடூன், இம்பால், சண்டிகர் ஆகிய நகரங்கள் அடங்கும். 

தமிழகத்தின் அருகாமையில் இருக்கும் புதுச்சேரியில் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் பூகம்பம் ஏற்படலாம் என்று வெளியான அறிவிப்பால், புதுச்சேரிக்கு அருகில் இருக்கும் கடலூர், காஞ்சிபுரம் மற்றும் சென்னை போன்ற பகுதிகளில் வாழும் மக்களும் பீதியடைந்துள்ளனர். 

அதோடு இல்லாமல், நிலநடுக்கம் குறித்த பயம் கோவை மக்களையும் தொற்றிக்கொண்டுள்ளது. இந்த நிலையில், பூகம்ப அபாயதில் கோவை மூன்றாவது மண்டலத்தில் அமைந்துள்ளதாக கோவை அரசு தொழில்நுட்ப கல்லூரியின் புவிஅமைப்பியல் துறையின் உதவி பேராசிரியர் குமார் தெரிவித்துள்ளார். 



இது தொடர்பாக, அவர் சிம்ப்ளிசிட்டி-க்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மத்திய அரசின் பல்வேறு ஆராய்ச்சி நிலையங்களில் சீஸ்மோ ஃகிராப் (Research Scale) என்ற அளவியை கொண்டு நில அதிர்வுகள் தினமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நிலநடுக்கவியல் ஆய்வு மையம் இந்தியாவிலுள்ள 29 நகரங்களில் எந்த நேரத்திலும் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது. இந்த பட்டியலில் புதுச்சேரியும் இடம்பெற்றுள்ளது. 

5 மண்டலங்கள்:

நிலநடுக்கம் ஏற்படும் அளவு மற்றும் தன்மையினை கொண்டு இந்திய நிலப்பரப்பு ஒன்று முதல்  5 மண்டலங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. அதில் முதல் மற்றும் 2-வது  மண்டலங்கள் நிலநடுக்கம் மற்றும் பூகம்பங்கள் ஏற்படாத பகுதிகளாகவும், 3-வது மண்டலத்தில் உள்ள நகரங்கள் நிலநடுக்கம் ஏற்பட சாத்திய கூறுகள் உள்ள இடங்களாகவும், 4 மற்றும் 5-வது மண்டலங்களில் உள்ள நகரங்கள் நிலநடுக்கம் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ள இடங்களாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

கோவை:

வகைப்படுத்தப்பட்ட 5 மண்டலங்களில் கோவை நகரம் 3-வது மண்டலத்தில் இடம்பெற்றுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கோவை கண்டறியப்பட்டுள்ளது. கேரளா உட்பட மேற்கு பகுதியில் அமைந்துள்ள பல நகரங்களும் 3-வது மண்டலத்தில் வருகின்றன. கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் கோவை 2-வது மண்டலத்தில் தான் இருந்தது. அதன்பின்னர், தொடர்ந்து 3-வது மண்டலத்தின் கீழ் அதாவது, நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ள நகரங்களின் பட்டியலில் இடம்பெற்று வருகிறது.



காரணிகள்:

சுரங்கங்கள், குவாரிகள் போன்றவைகள் நில அதிர்வை அதிகரிக்க செய்யும் முக்கிய காரணிகளாக உள்ளன. கோவையை சுற்றிய சிமென்ட் மற்றும் கிரனைட் குவாரிகளே இதற்கு மிக முன்னோடி. அதோடு, தொடர்ந்து, அடுக்ககடுக்கான கட்டிடங்களும், நிலத்தடி நீரை அதிக அளவில் உறிஞ்சுவதும் நிலநடுக்கத்தின் காரணிகளாக அறியப்படுகிறது.  இந்த ஆபத்தில் இருந்து மீள தனி மனித விழிப்புணர்வு மிக முக்கியமாகும். ஒரு முறை நில நடுக்க வாய்ப்பு உள்ள இடமாக ஒரு நகரம் கண்டறியப்பட்டால் அது மீண்டும், நில நடுக்கம் ஏற்படாத பகுதியாக மாறுவது கடினம். அதுபோல், எந்த நகரமும் இதுவரை மாறியது இல்லை.  கோவை மாவட்டம் மேலும் முன்னேறி 4 மற்றும் 5-வது பிரிவுகளுக்கு சென்றுவிடாமல், இந்த 3-வது பிரிவிலேயே நம்மை தக்க வைப்பதுவே சிறந்த வழிமுறையாக தெரிகிறது. 

இவ்வாறு அவர் கூறினார்.

முந்தய காலகட்டத்தில் கோவையில் நிகழ்ந்த நிலநடுக்கம் குறித்து வரலாற்று ஆய்வாளரும், பூகம்ப ஆராய்ச்சியாளருமான சரவணக்குமார் நமக்களித்த பேட்டியில் கூறியதாவது :- 



கடந்த 1900-வது ஆண்டு பிப்ரவரி மாதம் 8-ம் நாள் அன்றைய மதராஸ் மாகணத்தில் இருந்த கோவையில் நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.0 மற்றும் 6.4 என்ற அளவாக பதிவானது.

இன்று கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள நல்லேபள்ளி என்ற இடத்தில் தான் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கோவையில் இருந்து 29 கி.மீ. தொலைவில் உள்ள இந்த பகுதி தான் பூகம்பத்தின் மையப்புள்ளியாக உள்ளது. பூமியின் மேற்பரப்பில் இருந்து 70 கி.மீ. ஆழத்தில் தோன்றிய நிலநடுக்கம் சென்னை-லிருந்து  திருநெல்வேலி வரையிலும், கேரளாவில் கொச்சின், கோட்டயம், திருச்சூர் மற்றும் கோழிக்கோடு பகுதியிலும் உணரப்பட்டது. 25 ஆயிரம் சதுர கிலோமீட்டர் வரையில்  இந்நிலநடுக்கத்தின் பாதிப்பு இருந்துள்ளது. இன்றுவரையில், தென்னிந்தியாவில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கமாக கோயமுத்தூர் நிலநடுக்கம் உள்ளது. 

இந்த நிலநடுக்கம் வந்தபோது கோவையின் அடையாளங்களுள் ஒன்றான மணிக்கூண்டு இடிந்து விழுந்தது. அப்போது டவுன்ஹால் பகுதியில் மட்டும் 47 பேர் உயிரிழந்தனர். இது குறித்த ஆவணங்கள் ஜெயசி என்ற கிறித்தவ ஆலய கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது.

எப்போது? 

ஒரு இடத்தில் நிலநடுக்கம் ஏற்படுமேயானால் அதே பகுதியில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்படும் என்பது அறிவியல் பூர்வமான உண்மை. 100 ஆண்டுகளில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. கோவையில் இந்த நிலநடுக்கம் தோன்றி இதோடு 117 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. கடந்த 5 ஆண்டுகளாக நல்லேபள்ளியை சுற்றிய பகுதிகளில் 2.8 மற்றும் 3.1 என்ற ரிக்டர் அளவுகளில் லேசான நிலநடுக்கம் பதிவாகி வருகிறது. இதை மிகப்பெரிய பூகம்பத்தின் முன்னோடி சனலங்களாக கருத முடியும். எனவே, மீண்டும் நல்லேபள்ளியை மையமாக கொண்டு நிலநடுக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.   

இவ்வாறு பூகம்ப ஆராய்ச்சியாளர் சரவணக்குமார் கூறியுள்ளார்.

நிலநடுக்கம் வரலாம் என்ற நிலையிக்கு கோவை தள்ளப்பட்டுள்ள இந்த சூழலில், இயற்கையை காயப்படுத்தாமல், மண்ணின் தன்மைக்கேற்ப ஒன்றி வாழ்வதே நம் பாதுகாப்பை உறுதிப்படுத்தும்.

Newsletter

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...