இயற்கை வனப்பகுதியை சீரழித்து மிருகங்களின் வாழ்வாதாரத்திற்கு தீங்கு ஏற்படுத்திய மனிதர்களே அதற்கான முழுப் பொருப்பையும் ஏற்க வேண்டும். அதற்கான சூல்நிலையும் தற்போது ஏற்பட்டுள்ளது.
மனிதர்களால் அழிக்கப்பட்ட இயற்கை தானாகவே மீண்டு இயற்கையை அடைந்தாலும், பல பகுதிகளில் அவ்வாறாக அழிக்கப்பட்ட இயற்கை மீளமுடிவதில்லை. அதனை மீட்கும் கட்டாயத்தில் மனிதர்கள் என்னதான் நேரம் மற்றும் தொகையினை விரையம் செய்தாலும் இயற்கையை மீட்பதில் தோல்வியே கிடைக்கிறது.
அவ்வாறாக மனிதர்களால் பாதிக்கப்பட்டதே முதுமலையில் உள்ள ஒரு குட்டி யானை. கிருஷ்ணகிரி ஆற்றின் கரையோரப் பகுதியில் தாயினால் கைவிடப்பட்ட நிலையில் 2 வயதே ஆன ஒரு குட்டி யானை சுற்றித்திரிந்துள்ளது. அதனை தாயுடன் சேர்க்க வனத்துறையினர் பல முயற்சியில் ஈடுபட்டும் தாய் யானை கண்டுபிடிக்கப்படவில்லை.

தொடர்ந்து, அந்த குட்டி யானை மீட்கப்பட்டு முதுமலை புலிகள் காப்பகம் அருகே உள்ள தெப்பக்குளம் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளது. பொதுவாக ஒரு குட்டி யானை தனது நான்கு வயது வரை தாய்ப் பால் அருந்த வேண்டும். தற்போது, உடல் முழுவதும் காயமடைந்துள்ள இந்த குட்டி யானைக்கு தாய்ப் பால் கிடைப்பதில்லை. ஆதலால் தினமும், லேக்டோஜென்ஸ் (ஸ்டேஜ் 2) எனும் ஊட்டச்சத்து மிக்க பால் வழங்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து, விஜய் தொலைக்காட்சி புகழ் மா.கா.பா.ஆனந்த் தனது சமூகவலைதளப் பக்கத்திலும் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இந்த யானையின் உடல் நிலை குறித்தும் தேவைகள் குறித்தும் விளக்கியுள்ளார். குட்டி யானையின் உடலில் ஏற்பட்டுள்ள காயங்களை சுத்தம் செய்ய நாளொன்றுக்கு 300 மில்லி லிட்டர் டெட்டால் மற்றும் உணவிற்கு லேட்டோஜென்ஸ் (ஸ்டேஜ் 2) தேவைப்படுகிறது என்றும் இதனை வாங்க நிதிவுதவி தேவைப்படுவதாகவும், விருப்பம் உள்ளவர்கள் முன்வர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, மேலும் தகவல் மற்றும் உதவி செய்ய முன்வருவோர் வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளையினைச் சேர்ந்த சாதிக் அலி என்பவரை 9655023288 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.