கோவை மாநகராட்சி அனைத்து மண்டலப் பகுதியிலும் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர்- மாநகராட்சி ஆணையர் உத்தரவு


கோவை மாவட்டத்தில் மழைகாலம் துவங்கி விட்ட காரணத்தினால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் தடுப்புப் பணிகள் மண்டல வாரியாக தீவிர கண்காணிப்புடன் சிறப்பு கவனம் செலுத்தி கல்லூரி மாணவர்களை கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்த மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் உத்தரவிட்டிருந்தார்.

மாநகராட்சியின் அனைத்து பகுதிகளிலும் நீர்தேக்க தொட்டிகளில் அபேட் மருந்து ஊற்றுதல், தேவையற்ற பொருட்களை அகற்றுதல் ஆகியவற்றை உடனடியாக அப்புறப்படுத்தவும், வீட்டை சுற்றியும், மாடியிலும் போட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது.



இதன் தொடர்ச்சியாக மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் ஒண்டிப்புதூர், சேரன்மாநகர் டெங்கு களப்பணிகளை ஆய்வு செய்து அங்குள்ள பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கினார். மேலும், கோவை மாநகராட்சியில் உள்ள ஐந்து மண்டலங்களில் தெற்கு மண்டலத்தில், 86, 97, 95, 87, 92 மற்றும் 76 வார்டுக்குட்பட்ட, ஆசாத் நகர் 6 முதல் 9 வீதிகள், செந்தமிழ் நகர், வசந்தம் நகர், இட்டேரி புது வீதி, பிலால் காலனி, திருவள்ளுவர் நகர், சுகுணாபுரம், ஆறுமுக உடையார் தெரு மற்றும் பாரதி நகர் ஆகிய பகுதிகளில் டிபிசி பணியாளர்கள் 104 நபர்களும், மருத்துவ அலுவலர் 5 நபர்களும், தனியர் மருத்து அலுவலர்கள் 2 நபர்களும், நகர சுகாதார செவிலியர் 10 நபர்களும், முகாமில் பணிபுரிகின்றனர். பயனடைந்த பயனாளிகள் 725 நபர்கள், நிலவேம்பு குடிநீர் 1322 நபர்களுக்கு வழங்கப்பட்டது. 12 புகை மருந்தடிக்கும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டது.



மேற்கு மண்டலத்தில், 8,21 வார்டுக்குட்பட்ட, ஜிம்சன் நகர் மற்றும் சுண்டப்பாளையம் ரோடு பகுதிகளில் டிபிசி பணியாளர்கள் 40 நபர்களும், மருத்துவ அலுவலர் 1 நபரும், நகர சுகாதார செவிலியர் 3 நபர்களும் முகாமில் பணிபுரிகின்றனர். பயனடைந்த பயனாளிகள் 78 நபர்கள், நிலவேம்பு குடிநீர்; 550 நபர்களுக்கு வழங்கப்பட்டது. 7 புகை மருந்தடிக்கும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டது. 

கிழக்கு மண்டலத்தில், 32,36 வார்டுக்குட்பட்ட, சேரன்மா நகர், சி.என்.டி.குடியிருப்பு மற்றும் பூங்கா நகர் ஆகிய பகுதிகளில் டிபிசி பணியாளர்கள் 37 நபர்களும், மருத்துவ அலுவலர் 2 நபரும், மருந்தாளுநர் 2 நபரும், நகர சுகாதார செவிலியர் 4 நபர்களும் முகாமில் பணிப்புரிகின்றனர். பயனடைந்த பயனாளிகள் 138 நபர்கள் நிலவேம்பு குடிநீர் 224 நபர்களுக்கு வழங்கப்பட்டது. 5 புகை மருந்தடிக்கும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டது.

வடக்கு மண்டலத்தில், 38 மற்றும் 41 வார்டுக்குட்பட்ட, எல்லைத்தோட்டம் மற்றும் காந்திமாநகர் பகுதிகளில் டிபிசி பணியாளர்கள் 44 நபர்களும், மருத்துவ அலுவலர் 2 நபர்களும், மருந்தாளுநர் 1 நபரும், தனியார் மருத்துவர்கள் 3 நபர்களும், நகர சுகாதார செவிலியர் 4 நபர்கள் முகாமில் பணிப்புரிகின்றனர். பயனடைந்த பயனாளிகள் 306 நபர்கள் நிலவேம்பு குடிநீர்; 580 நபர்களுக்கு வழங்கப்பட்டது. 4 புகை மருந்தடிக்கும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டது.

மத்திய மண்டலத்தில், 45 மற்றும் 74 வார்டுக்குட்பட்ட, கண்ணப்பா நகர் 6 முதல் 10 வீதிகள்; கோட்டைப்புதூர் மற்றும் ஜி.எம்.நகர் ஆகிய பகுதிகளில் டிபிசி பணியாளர்கள் 40 நபர்களும், மருத்துவ அலுவலர் 2 நபர்களும், நகர சுகாதார செவிலியர் 8 நபர்களும் முகாமில் பணிப்புரிகின்றனர். பயனடைந்த பயனாளிகள் 287 நபர்கள் நிலவேம்பு குடிநீர்; 661 நபர்களுக்கு வழங்கப்பட்டது. 8 புகை மருந்தடிக்கும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டது. மேலும், அனைத்து மண்டலங்களிலும் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் ஒலிப்பெருக்கி மூலம், துண்டு பிரசுரங்கள் மூலம் வழங்கப்படுகிறது.

மேலும், இப்பகுதிகளில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர், இ.எஸ்.ஐ. மருத்துவமனை முதல்வர் மற்றும் தனியார் இன்சூரன்ஸ் ஒருங்கிணைப்பாளர்களுடன் இணைந்து மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதுபோன்று பல்வேறு டெங்கு தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. டெங்கு தடுப்பு பணிக்கு பொதுமக்களும் முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும். மேலும் காய்ச்சல் வந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறும், சுயமாக மாத்திரை மருந்துகள் உட்கொள்ள வேண்டாம் என மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் அறிவுறுத்தியுள்ளார்.

Newsletter

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...