கருமத்தம்பட்டியில் இரட்டைக் கொலை செய்தவரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு

கோவை கருமத்தம்பட்டியை அடுத்த வாய்க்கால்பளையம் பகுதியைச் சேர்ந்தவர் குமாரசாமி (63), இவரது மனைவி சுந்தராம்மாள் (58). இந்த தம்பதிக்கு இரு மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமான நிலையில், குமாரசாமி, சுந்தராம்மாள் தம்பதியினர் தங்களுக்கு சொந்தமான பண்ணை வீட்டில் விசைத்தறி நடத்தி வசித்துவந்தனர்.



இந்நிலையில், கடந்த 3 நாட்களாக குமாரசாமி மற்றும் அவரது மனைவி உறவினர்கள் யாரையும் தொடர்பு கொள்ளவில்லை. இதனால், நேற்று காலை குமாரசாமியை தேடி அவரது உறவினர்கள் பண்ணை வீட்டிற்கு சென்றனர். அப்போது குமாரசாமியும், சுந்தராம்மாளும் படுகாயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடப்பது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

தொடர்ந்து, போலீசார் மேற்கொண்ட விசாரணையில் குமாரசாமிக்கு சொந்தமான விசைத்தறியில் பணிபுரிந்த ஈரோட்டை சேர்ந்த பெருமாள் என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. 

தொடர்ந்து, அவரிடம் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியதில், குமாரசாமி தன்னை திட்டியதால் ஆத்திரத்தில் கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்தார். மேலும், இதை பார்த்த சுந்தரம்மாளையும் படுகொலை செய்து அவர் அணிந்திருந்த நகைகள் மற்றும் செல்போனை எடுத்துச் சென்றதாக கூறியுள்ளார்.

அதனைத்தொடர்ந்து, இந்த இரட்டைக்கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்ட குற்றவாளி பெருமாள் இன்று சூலூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். தொடர்ந்து, இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வரும் ஆகஸ்ட் 11-ம் தேதிவரை பெருமாளை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து, பெருமாள் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...