ஹீரோ மோட்டார் நிறுவனப் பெயரில் போலி வாகன உதிரி பாகங்கள் விற்பனையில் ஈடுபட்டோர் கைது

கோவையில் மோட்டார் வாகன பாகங்களில் போலியான பாகங்கள் விற்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்துவந்த நிலையில் சிபி சிஐடி, வீடியோ பைராசி செல் அதிகாரிகள் கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பிரபல வாகன மோட்டார் உதிரி பாகங்கள் விற்பனை நிலையங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.



அப்போது, மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் செயல்பட்டு வரும் ஸ்ரீ பாலாஜி ஆட்டோ ஸ்பேர்ஸ், மைசூர் ட்ரன்க் சாலையில் செயல்பட்டு வரும் லோட்டஸ் ஆட்டோ ஸ்பேர்ஸ் மற்றும் காரமடை சாலையில் செயல்பட்டு வரும் ரோனக் ஆட்டோ ஸ்பேர்ஸ் ஆகிய கடைகளில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனையில், ஹீரோ மோட்டார் நிறுவன பெயர் பதித்த போலியான வாகன உதிரி பாகங்கள் விற்கப்படுவது கண்டறியப்பட்டது. 

இதனைத்தொடர்ந்து, போலி வாகன உதிரி பாகங்களை பறிமுதல் செய்த கோவை மாவட்ட சிபிசிஐடி அதிகாரிகள் தொடர்ந்து, ஸ்ரீ பாலாஜி ஆட்டோ ஸ்பேர்ஸ் நிறுவனத்தின் சத்தீஷ் குமார் ராஜ்கோபால், லோட்டஸ் ஆட்டோ ஸ்பேர்ஸ்யின் ஜோதி குமார் இராமசுவாமி, ரோனக் ஆட்டோ ஸ்பேர்ஸ்யின் ராஜேந்திர குமார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

Newsletter

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

ராமநாதபுரத்தில் மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை

கோவை ராமநாதபுரம் அடுக்குமாடியில் தனியாக வசித்த 69 வயது கோமதியை கழுத்தை நெரித்துக் கொலை செய்து தங்க நகைகள் கொள்ளையடித்த த...

கோவை மாவட்டத்தில் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களிப்பு

கோவை மாவட்டத்தின் 10 சட்டமன்ற தொகுதிகளில் நடந்த தேர்தலில் மொத்தம் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களித்துள்ளனர். கவு...

காரமடை ரயில் நிலைய விரிவாக்கப் பணிக்காக தோலம்பாளையம் ரயில்வே கேட் காலவரையின்றி மூடல்

காரமடை ரயில் நிலைய விரிவாக்க பணிகள் மற்றும் புதிய பிளாட்பாரம் கட்டுமானத்திற்காக காரமடை - தோலம்பாளையம் இடையேயான ரயில்வே க...