தொழிலாளர் ஊதிய பிரச்சனையில் அரசு தலையிடாவிட்டால் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும்- ஏஐடியுசி முடிவு

தொழிலாளர் ஊதிய உயர்வு பிரச்சனையில் தமிழக அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் வரும் 7ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தனியார் நிறுவன தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கோவை தென்னம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் ரங்கநாதர் வால்வ்ஸ் நிறுவனத்தில் ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். 2016-ம் ஆண்டு டிசம்பருடன் ஊதிய ஒப்பந்தம் நிறைவடைந்துவிட்ட நிலையில் புதிய ஊதிய ஒப்பந்தத்தில் கூடுதல் சம்பளம் தர நிர்வாகம் மறுத்து விட்டதால் இது தொடர்பான பேச்சுவார்த்தை தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நிறுவனத்தில் உள்ள இயந்திரங்களை வேறு கிளைகளுக்கு மாற்ற நிர்வாகம் முயற்சி செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக முடிவு செய்யக் கோரியும் இப்பிரச்சனையில் தமிழக அரசு தலையிட கோரியும் ஏஐடியுசி சங்கம் சார்பில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட தொழிலாளர்கள் தமிழக அரசு இப்பிரச்சனையில் தலையிட்டு உரிய தீர்வை ஏற்படுத்தி தர வேண்டும் எனவும் இல்லையேல் வருகிற 7ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்தனர்.

முன்னதாக, இந்த ஆர்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...