கோவை மாவட்டத்தில் அழிந்துவரும் நீர்நிலைகளை மீட்டெடுக்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வரும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் ஞாயிறன்று (ஜூலை 30) 25-வது வார களப்பணியாக விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர்.

நொய்யல் தடுப்பணைகளை பாதுகாக்கும் வகையில் நடத்தப்பட்ட இந்த விழிப்புணர்வு பேரணியின் போது, சித்திரைச் சாவடி தடுப்பணை, குனியமுத்தூர் தடுப்பணை, கோயமுத்தூர் தடுப்பணை, குறிச்சி தடுப்பணை ஆகியவற்றை பாதுகாக்கும் வகையில் 65 இருசக்கர வாகனத்தில் சுமார் 130-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.