மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைள் குறித்து நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நல்ததுறை அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் ஆகியோர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், சட்டமன்ற பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் காய்ச்சல் மற்றும் தொற்று நோய்கள் நிலைமை, கொசு ஒழிப்பு பணிகள் அரசு மருத்துவமனைகளில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கத் தேவையான வசதிகள், அரசு மருத்துவமனைகளில் போதுமான படுக்கை வசதிகள், காய்ச்சல் பரிசோதனை வசதிகள், தேவைப்படும் அத்தியாவசிய மருந்துகள் கையிருப்பு போன்றவைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசுகையில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊரக பகுதிகளில் வழங்கப்படும் குடிநீரில் குறைந்து பட்ச குளோரின் அளவு 0.2பி.பி.எம் ஆக இருப்பதை உறுதி செய்திட வேண்டும். திறந்த நிலை கிணறுகள் போன்ற நீர் ஆதாரங்களில் குளோரின் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும், குடிநீர் தேக்கத் தொட்டிகள் மற்றும் மேல்நிலைத் தொட்டிகளை சுத்தமாக பராமரிக்க வேண்டும் வீடுகள் மற்றும் பொது இடங்களில் கொசுக்கள் உற்பத்தியாவதற்கு காரணமான டயர் மற்றும் கொட்டாங்குச்சி மற்றும் திறந்த நிலை தொட்டிகள் ஆகியவற்றில் தண்ணீர் தேங்காத வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும்.
மேலும், மழைநீர் வடிகால்களை திணமும் சுத்தப்படுத்தி வடிகாலில் கழிவு நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் தரமான மற்றும் வீரியமான கொசு ஒழிப்பு மருந்தை சரியான கால இடைவெளியில் சுழற்சி முறையில் தெளிக்க வேண்டும். அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊரக பகுதிகளில் காலை 6.00 மணிக்கு நிர்வாக அலுவலர்கள் முதல் அடிமட்ட பணியாளர்கள் வரை நேரில் சென்று துப்புறவு பணிகளையும், குடிநீர் வழங்கல் பணிகளையும், ஆய்வு செய்திட வேண்டும். கொசுப்புழு உற்பத்தியாகும் ஆதாரங்களை முற்றிலுமாக ஒழித்திட வேண்டும் தொற்று நோய்களை பரப்பு ஏ.டி.எஸ்.கொசுக்களை முழுமையாக ஒழிக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் தண்ணீர் தேங்கி நிர்க்கும் பகுதிகளிலும், குடியிறுப்பு பகுதிகளிலுள்ள வீடுகளின் உள்ளேயும், வெளியேயும் புகையடித்தல் மற்றும் மருந்து தெளித்தல் போன்ற பணிகளை சீராகவும், துள்ளியமாகவும் மேற்கொள்ள வேண்டும். கொசு முட்டை மற்றும் புழுக்களை ஒழித்திட தேவையான மருந்தினை இருப்பில் வைத்துக் கொள்ள வேண்டும்.
அனைத்து நகர்புற மற்றும் ஊரக உள்ளாட்சிப்பகுதிகளில் உள்ள காலிமனைகளில் சில இடங்களில் பொது மக்களால் கொட்டப்பட்டு தேங்கிக்கிடக்கும் குப்பைக் கூளங்களை, அவ்விடம் தனியாரிடமென்றும் பாராமல் அவற்றினை அப்புறப்படுத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும். புகையடிக்கும் இயந்திரங்கள் போதுமான அளவில் உள்ளதை உறுதி செய்திட வேண்டும் தேவைப்படின் உடனடியாக தரமான இயந்திரங்கள் கொள்முதல் செய்யப்பட வேண்டும். மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் தன்னார்வ தொண்டர்கள் ஆகியோரை தொற்று நோய் ஒழிப்பு பணியில் முழுமையாக ஈடுபடுத்தி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும். முக்கியமாக, கைப்பிரதிகள் வழங்குதல், விழிப்புணர்வு ஊர்வலம், தகவல் தொடர்பு மற்றும் கல்வி, ஆகிய முறைகளை பயன்படுத்தி விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்து டெங்கு காய்ச்சல் போன்ற நோய்கள் பரவுவதை தடுக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடடிவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும்.
மேலும், தொற்று நோய் பாதிப்புகள் அறியப்பட்டுள்ள இடங்களில் மேற்படி நடவடிக்கைள் தடையின்றி தொடர்ந்து போர்கால அடிப்படையில் தீவிரமாக நடைபெற ஏதுவாக சிறப்புக்குழுக்கள் அமைத்து சுகாதாரத்துறை அலுவலர்களுடன் இணைந்து தடுப்பு நடவடிக்கைகள் ஒவ்வொறு வீடுகளுக்கும் சென்று மேற்கொள்ளப்பட வேண்டும் எனக் கூறினார்.
தொடர்ந்து பொதுசுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேசுகையில், கொசுக்களை கட்டுப்படுத்தும் நடவடிக்ககைகளான கொசு மருந்து தெளித்தல் புகை மருந்து அடித்தல் போன்ற பணிகள் தொய்வில்லாமல் தொடர்ந்து சிறப்பாக அறிவுரையும், இப்பணிகளை தொடர்ந்து தீவிரமாக மேற்கொள்ள பல்வேறு துறைகளுக்கான ஒருங்கினைப்பு குழுக்கூட்டம் அவ்வப்போது நடைபெற வேண்டுமென்று எடுத்துரைக்கப்பட்டது. மேலும், காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மருத்துவ முகாம்கள் மேற்கொள்ளுதல், பாதுகாப்பான குடிநீர் வழங்குவதை உறுதி செய்தல், பள்ளி கல்லூரி மாணவர்கள் மூலம் விழிப்புணர்வு பேரணி நடத்துதல் மற்றும் குறும்படங்கள் திரையிடுதல் போன்ற நடவடிக்கைகளும் தொடர்ந்து தீவிரமாக நடைபெற அறிவுரைகள் வழங்கப்பட்டன. மேலும், பொதுசுகாதாரத்தை நிலை நிறுத்தும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் செய்திட மாவட்ட ஆட்சியர்களும் மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்தினருக்கும் அறிவுரை வழங்கப்பட்டன.
மேலும், டெங்கு போன்ற காய்ச்சலை தடுக்க போதிய விழிப்புணர்வு தொடர்புடைய துறையினருடன் ஒருங்கினைப்பு, குறித்த நேரத்தில் உரிய சிகிச்சை வழங்குதல் ஆகியவற்றின் அவசியத்தை அமைச்சர்கள் வலியுறுத்தினர். எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் இயற்கையான முறையில் காய்ச்சல் குணமடைய நிலவேம்பு குடிநீர், பப்பாளி இலைச்சாறு மற்றும் மலைவேம்பு இலைச்சாறு இலவசமாக வழங்கும் பணியை தீவிரமாக மேற்கொள்ளவும், காய்ச்சல் கண்டவுடன் அங்கீகாரம் பெறாத போலி மருத்துவர்களிடம் சிகிச்சை பெறுவதை முற்றிலுமாக தவிர்த்து, காலதாமதமின்றி அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளுக்குச் சென்று முறையான சிகிச்சை பெறவும் தனியார் மற்றும் அரசு மருத்துவர்கள் டெங்கு காய்ச்சலுக்கு ஒரே மாதிரியான சிகிச்சை முறைகளை கடைபிடிப்பதன் அவசியத்தையும் அமைச்சர் வலியுறுத்தினார்.
டெங்கு காய்ச்சலை ஏறப்படுத்தும் கொசுப்புழு மற்றும் கொசு ஒழிப்பு பணிகளை மேற்கொள்ளும் மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் ஊழியர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி கொசு ஒழிப்பினை ஒரு மக்கள் இயக்கமாகவே மாற்றுவதற்கு பொதுமக்கள் முன்வர வேண்டும். மேலும், காய்ச்சல் மூலம் இறப்பு என்ற நிலையே ஏற்படக்கூடாது என்ற அளவிற்கு மேலும் அர்பணிப்பு உணர்வுடன் மருத்துவர்கள், துறை அலுவலர்கள் மற்ற துறைகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என அவர்கள் அறிவுறுத்தினர்.

இக்கூட்டத்தில், கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் கே.அர்ச்சுணன், வி.சி.ஆறுகுட்டி, எட்டிமடை சண்முகம், கஸ்தூரி வாசு, கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் விஜயகார்த்திகேயன், திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் அசோகன், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துகள் துறை இயக்குநர் குழந்தைசாமி, பொள்ளாச்சி சார் ஆட்சியர் காயத்ரிகிருஷ்ணன், உள்ளிட்ட மக்கள் நல்வாழ்வுத்துயைச் சார்ந்த துறைத் தலைவர்கள் மற்றும் இரண்டு மாவட்டங்களை சார்ந்த மக்கள் நல்வாழ்வு மற்றும் தொடர்புடைய துறைகளை சார்ந்த உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.