கோயமுத்தூர் மாநகராட்சியில் ஏற்படும் பருவநிலை மாற்றங்களுக்கான நடவடிக்கைகள் குறித்த கருத்தரங்கம் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலரான டாக்டர்.க.விஜயகார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது. இதனை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் துவக்கி வைத்து பருவநிலை மாற்றங்கள் குறித்து உரையாற்றினார். இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த பருவநிலை மாற்றங்களுக்கான ஆராய்ச்சி வல்லுனர்கள் கலந்து கொண்டனர். மேலும், இந்நிகழ்வில் தன்னார்வ அமைப்பினர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.