கோவையில் தற்போது வட மாநிலத்தை சேர்ந்த பலர் இங்கு பணி புரிந்து வருகின்றனர். குறைவான சம்பளம், தங்குமிடம், உணவு என அனைத்தும் வழங்கி இவர்களை தனியார் நிறுவனங்கள் பணி அமர்த்திகின்றனர். இவர்கள் வேலை செய்து தருவதால் கோவை மற்றும் அதன் சுற்றுபுற பகுதிகளில் உள்ள தனியார் நிறுவனங்கள் அதிக அளவில் ஆட்களை பணி அமர்த்துகின்றனர். இவ்வாறு நிறுவனங்களுக்கு ஆட்கள் சப்ளை செய்ய புரோக்கர்கள் அதிக அளவில் பெருகிவிட்டனர். கோவை சூலூர் அடுத்த அக்கநாய்க்கன்பட்டி பகுதிகளுக்கு ஆட்களை சப்ளை செய்யும் வேலையை வடமாநிலத்தவரான மனோ ரஞ்சன் திவாரி என்பவரும் ரஞ்சன் திவாரி என்பவரும் செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இருவர்க்கும் தொழில் போட்டி காரணமாக மோதல் ஏற்பட்டு மனோ ரஞ்சன் திவாரியை ரஞ்சன் திவாரி தாக்கியதில் பலத்த காயம் ஏற்பட்டதாக கூறி மனோ ரஞ்சன் தனியார் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் தொடர்பாக சூலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.