கோவை ரத்தினபுரி பகுதியில் விஹெச்பி அமைப்பின் மாவட்ட செயலாளர் சிவலிங்கத்தின் கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டது குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கோவை மாவட்ட செயலாளராக சிவலிங்கம் என்பவர் உள்ளார். இவரது வீடு ரத்தினபுரி பகுதியில் உள்ளது. சிவலிங்கத்தின் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டு இருந்த காரை, நேற்றிரவில் வந்த மர்மநபர்கள் கற்களை கொண்டு உடைத்துள்ளனர். முன்பக்கம் மற்றும் பின் பக்க கண்ணாடி கற்களால் அடித்து உடைக்கப்பட்டுள்ளன. மேலும் அருகேயிருந்த ஒரு வீட்டின் மீதும் கல்வீச்சு நடந்ததாக கூறப்படுகிறது. இன்று காலையில் கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த சிவலிங்கம், போலீசாருக்கு தகவல் அளித்தார். இதன்பேரில் நிகழ்விடத்திற்கு வந்த ரத்தினபுரி காவல் துறையினர் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.