அன்றாடம் பல்லாயிரம் மக்கள் வந்து செல்லும் கோவை விமான நிலையத்தில் பயணிகளின் பேக்கேஜ்களை சோதனையிடும் கருவியானது பெரிய அளிவில் ஒன்றும், சிறிய அளவில் ஒன்றும் மட்டுமே உள்ளது.
இதில், பெரிய அளவிலான கருவி அவ்வப்போது பிரச்சனை ஏற்பட்டு கோளாராகிவிடுகிறது. இதற்கு மாற்றாக பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள சிறிய அளவிலான ஸ்கேன் கருவியினை பயன்படுத்த நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவலநிலை பயணிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே, நீண்ட நேரம் பயணித்து சோர்வுடன் வரும் பயணிகளை இந்த ஸ்கேன் முறை மேலும் சோர்வடைய வைக்கும் வகையில் உள்ளது.
இதேப்போன்று கடந்த 21ம் தேதியன்று விமானம் மூலம் கோவை வந்த பயணிகளின் பொருட்களை ஸ்கேன் கருவியின் மூலம் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு இருந்த போது அந்த இயந்திரம் பழுதானது. தொடர்ந்து, அதனை சீரமைக்க நீண்ட நேரம் ஆனதால் பயணிகளுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கோவை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
எனவே, விமானத்துறை அதிகாரிகள் கோவை விமான நிலையத்திற்கு கூடுதலாக ஸ்கேன் கருவி வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதே கோவை விமான நிலையத்திற்கு வரும் பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.