குழந்தை தொழிலாளர் ஒழிப்பு விழிப்புணர்வு குறித்த போட்டிகளில் வெற்றிபெற்றோருக்கு பரிசு

தேசிய குழந்தை தொழிலாளர் திட்டத்தின் நிர்வாகக்குழுக் கூட்டத்தில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு விழிப்புணர்வு குறித்த போட்டிகளில் வெற்றிபெற்ற பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயங்களை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் வழங்கினார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று தேசிய குழந்தை தொழிலாளர் திட்டத்தின் நிர்வாகக்குழுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் நடைபெற்றது.



இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:-

கோவை மாவட்டத்தில் மத்திய, மாநில அரசுகளின் உதவியோடு குழந்தைத் தொழிலாளர்களின் மறுவாழ்விற்க்காக 1995 ஆம் ஆண்டு முதல் தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்  மூலம் 6 வயது முதல் 14 வயது வரை உள்ள குழந்தைத் தொழிலாளர்களை மீட்டு அவர்களை சிறப்பு பயிற்சி மையங்களில் சேர்த்து இலவச கல்வி அளிக்கப்படுகிறது.

மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட அமலாக்க குழு செயல்பட்டு வருகிறது. இக்குழுவில் தொழிலாளர் துறை, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கம், காவல் துறை, வருவாய்த்துறை, சுகாதாரத் துறை தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டம் மற்றும் தன்னார்வ தொண்டர்கள் அடங்கிய குழுவினர் மாதம் தோறும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டு 14 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தால் அவர்களை மீட்டு குழந்தைகள் நலக் குழுவில் ஒப்படைத்து மறுவாழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

6 வயது முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகளை எந்த வித பணிகளிலும் ஈடுபடுத்தக் கூடாது என்பதை வலியுறுத்தி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு வகையான விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிராக துண்டு பிரசுரங்கள், சுவரொட்டிகள், பிளக்ஸ் பேனர்கள், வீதி நாடகங்கள், ஊர்வலங்கள், பேரணிகள் மனித சங்கிலி, கையெழுத்து இயக்கம், கிராம அளவில் விழிப்புணர்வு கூட்டங்கள் ஸ்டிக்கர் பிராச்சாரம், வீடுவீடாக பிரச்சாரம் செய்தல், குறும்படங்கள் திரையிடுதல் உள்ளிட்ட விழிப்புணர்வு நடவடிக்கைகள் பொது மக்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு அரசின் செயல் திட்டத்தில் குறிப்பிட்டுள்ளபடி குழந்தைத் தொழிலாளர் முறையை முற்றிலும் அகற்றிட கல்வித்துறை, வருவாய்த்;துறை, காவல் துறை, சமூக பாதுகாப்புத் துறை, சுகாதாரத்துறை, ஊரக வளர்ச்சித்துறை. வருவாய்த்துறை, சமூக நலத்துறை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட துறைகளுடன் ஒருங்கிணைந்து குழந்தைத் தொழிலாளர்களை மீட்டு மறுவாழ்வு அளிப்பதோடு குழந்தைத் தொழிலாளர்களின் பெற்றோர்களை அரசின் பல்வேறு நலத்திட்டங்களில் பயன்பெற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

மத்திய அரசு புதிதாக பிறப்பித்துள்ள குழந்தைத் தொழிலாளர் தடுத்தல் மற்றும் முறைப்படுத்துதல் திருத்த சட்டத்தில் 14 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளை எந்த வித பணிகளிலும் ஈடுபடுத்த கூடாது என்றும் 14 -18 வயதிற்கு கீழ் உள்ள வளர் இளம் பருவத்தினரை அபாய கரமான தொழில்களில் ஈடுபடுத்த கூடாது என்றும் வரையரை செய்துள்ளது.

மேற்குறிப்பிட்டுள்ள வயதுள்ளவர்களை பணிக்கு அமர்த்தினால் அந்த நிறுவனத்தின் மீது தொழிலாளர் துறை அல்லது தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கம் மூலம் வழக்கு பதிவு செய்து ரூ.20,000 முதல் ரூ.50,000 வரை அபராதமும் 6 மாதம் முதல்  3 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு திட்ட இயக்குநர் விஜய குமார், வருவாய் கோட்டாட்சியர் சின்னசாமி, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர்கள் சங்கர், செந்தில்குமார் மற்றும் அரசு அலுவலர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...