கோவை மாவட்டத்தில் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு திருமண உதவித் தொகை, முதியோர் ஓய்வூதியம், விபத்து மரணம் மற்றும காயம், இயற்கை மரணம், புற்றுநோய் உள்ளிட்டு பல்வேறு நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தில் கல்வி உதவித் தொகை பெற நடப்பு 2017-18 கல்வி ஆண்டு துவக்கத்தில் இருந்து 6 மாதத்திற்குள்ளும், திருமண உதவித் தொகை பெற திருமணத் தேதிக்கு முந்தைய 3 மாதத்திற்குள் அல்லது திருமண தேதியில் இருந்து 6 மாதத்திற்குள்ளும், இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு, மரணம் நிகழ்ச்த தேதியில் இருந்து 6 மாதத்திற்குள்ளும் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும், இத்திட்டத்தின் கீழ் நிலமற்ற ஆதரவற்ற விவசாய தொழிலாளர்கள் முதியோர் உதவித் தொகை பெற 60 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். இத்திட்டத்தில் முதியோர் உதவித்தொகை விண்ணப்பம் காலவரம்புகள் ஏதுமில்லை.
முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தில் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மேற்கண்ட திட்டம் தொடர்பான விபரங்கள் சம்பந்தப்பட்ட கிராமத்தின் கிராம நிர்வாக அலுவலர், குறுவட்ட நில வருவாய் ஆய்வாளர் மற்றும் சமூக பாதுகாப்புத்திட்ட தனிவட்டாட்சியரிடம் தகவல் பெற்று விண்ணப்பித்து பயனடையலாம் என கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.