கோவை மாவட்டம், கனியூர் வட்டத்திற்கு உட்பட்ட ஊஞ்சப்பாளையம் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த மக்கள் முறையாக குடிநீர் விநியோகிக்கக் கோரி இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இதுகுறித்து ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த அப்பகுதி மக்கள் கூறுகையில், இந்திரா நகர் பகுதியில் சுமார் 2500-க்கும் மேற்பட்ட குடும்பங்களாக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறோம். இப்பகுதியில் கடந்த சில மாதங்களாக முறையாக குடிநீர் விநியோகிப்பது இல்லை. தங்களிடம் குடிநீர் இணைப்பு வழங்குவதற்காக 8500 ரூபாய் வசூலிக்கப்பட்டது. குழாய் இணைப்பும் வழங்கப்பட்டது.
இருப்பினும், முன்பு தெரு பொதுக்குழாயில் விநியோகிக்கப்பட்ட அளவை விட குறைவாகவே நீர் விநியோகம் செய்யப்படுகிறது. தலா ஒரு குடும்பத்திற்கு 10 குடங்களுக்கும் குறைவாகவே கிடைக்கிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் முறையிட்டாலும் அவர்கள் அலட்சியமாகவே பதிலளிக்கின்றனர்.
எனவே, கோவை மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொண்டு உடனடியாக எங்களது பகுதிக்கு முறையாக குடிநீர் கிடைக்க வழிவகைசெய்ய வேண்டும்". இவ்வாறு அம்மக்கள் தெரிவித்தனர்.