திருப்பூரில் நடைபெறும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளார்

புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் நினைவை போற்றும் வகையிலும், அவர் ஆற்றிய பணிகள், அவர் பெற்ற புகழ்கள் இன்றைய இளைஞர்கள் மற்றும் வருங்கால சந்ததியினர், மக்கள் அறிந்திடும் வகையில் இந்நூற்றாண்டு விழா அரசின் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாக, மிகப்பிரமாண்டமான முறையில் கொண்டாட வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு, இதன் தொடக்க விழா மதுரையில் மிக பிரமாண்டமாக 30.06.2017 அன்று நடைபெற்றது. இவ்விழாவில் பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் மகளிர் பெருமளவில் வருகை தந்ததால், மதுரை மாநகரமே விழாக்கோலம் கொண்டது. அதனைத் தொடர்ந்து திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் பாரத ரத்னா புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் நூற்றாண்டு விழா 22.07.2017, சனிக்கிழமை அன்று சிறப்பாக நடைபெறவுள்ளது.

இவ்விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர் பெருமக்கள் பங்கேற்று சிறப்பிக்க உள்ளார்கள். 

இவ்விழாவினையொட்டி திருப்பூர் மாவட்டம் முழுவதும் ஒரு வார காலமாக பள்ளி மாணவ, மாணவியர்களிடையே பல்வேறு கட்டுரை, கவிதை, பேச்சு மற்றும் விளையாட்டு போட்டிகளும், ஊராட்சி பகுதிகளில் பாரத ரத்னா எம்.ஜி.ஆர் பற்றிய குறும்படமும், அவர் நடித்த திரைபடங்களும் கிராமங்களில் மின்னணு திரையின் மூலம் திரையிடப்பட்டு வருகின்றன.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெறும் பாரத ரத்னா புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவிற்கு  தமிழ்நாடு சட்டப்பேரவைத்தலைவர் தனபால்  தலைமை வகிப்பார்கள். வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் முன்னிலை வகிப்பார்கள்.  மக்களவைத் துணைத்தலைவர் டாக்டர் தம்பிதுரை அவர்கள் சிறப்புரையாற்றுவார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி மு.பழனிசாமி  பாரத ரத்னா புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் திருவுருவப் படத்தினை திறந்து வைத்து, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி விழா பேருரையாற்றுவார்கள்.

இவ்விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி மு.பழனிசாமி அவர்கள் கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் ரூ.207.37 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 8 புதிய கட்டடங்களை திறந்து வைத்தும், பள்ளிக்கல்வித்துறை, வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை, பேரூராட்சிகள் துறை மற்றும்  இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் ரூ.13.24 கோடி மதிப்பீட்டில் 13 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்தும் சிறப்பிக்க உள்ளார்கள்.

மேலும், வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, மகளிர் திட்டம், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம், திருப்பூர் மாநகராட்சி, பள்ளிக்கல்வித்துறை, வனத்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல் துறை, கால்நடைப்பராமரிப்புத்துறை, தொழிலாளர் நலத்துறை சமூக பாதுகாப்புத்திட்டம், சமூக நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, கூட்டுறவுத்துறை, தாட்கோ, கைத்தறி மற்றும் துணி நூல் துறை, குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மற்றும் மாவட்ட தொழில் மையம் ஆகிய துறைகளின் சார்பில் 21,099 பயனாளிகளுக்கு ரூ.220 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்கள்.

விழாவில், அமைச்சர் பெருமக்கள், சட்டப்பேரவை துணைத்தலைவர், அரசு தலைமை கொறடா, மாண்புமிகு தமிழ்நாடு அரசின் சிறப்பு பிரதிநிதி, புதுடில்லி மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், வாரிய தலைவர்கள் பங்கேற்று வாழ்த்துரை வழங்குவார்கள். தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர்  கிரிஜா வைத்தியநாதன் வரவேற்புரையாற்றுவார்கள். திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கே.எஸ்.பழனிசாமி, நன்றியுரையாற்றுவார்கள்.

Newsletter

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...