மாவட்ட ஆட்சியர் தலைமையில் சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச்சட்டம் - 2017 குறித்து பயிலரங்கம்

கோவை மாநகரட்சி கலையரங்கத்தில் வணிகவரித்துறையின் மூலம் இன்று சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச்சட்டம் - 2017 தொடர்பான மாவட்ட அளவிலான பயிலரங்கம் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் நடைபெற்றது.

இக்கருத்தரங்கில் மாவட்ட ஆட்சியர் பேசியதாவது:-

சுதந்திர இந்தியாவின் மிகப் பெரிய வரி சீர்திருத்தம் சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச்சட்டமானது கடந்த மாதம் ஜூலை 1 முதல் நாடு முழுவதும் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. இச்சட்டம் நுகர்வோர்களாகிய பொதுமக்கள், வணிகர்கள், உற்பத்தியாளர்கள் என அனைவருக்கும் நலன் தரும் எளிய சட்டமாகும்.

மறைமுக வரியில் ஏற்படுத்தப்பட்ட மிகப்பெரிய சீர்திருத்தமான ஜிஎஸ்டி சட்டமானது ஒரே நாடு, ஒரே வரி, ஒரே சந்தை என்கிற குறிக்கோளினை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, சரக்கு மற்றும் சேவைகளுக்கு 0 முதல் 28 சதவிகிதம் வரை வரி நிர்ணயம் செய்துள்ளது. வரிக்கு மேல் வரி விதிப்பது தடுக்கப்படுவதால் வரிச்சுமையானது குறைவதோடு,  சரக்குகளின் விலையும் குறைகின்றன. வெளிமாநிலத்திலிருந்து கொள்முதல் செய்யப்படும் கச்சாப்பொருட்கள் மற்றும் வணிகம் செய்ய கொள்முதல் செய்யப்படும் உற்பத்தி பொருட்களுக்கு,  உள்ளீட்டு வரி எடுத்துக்கொள்ளும் முறை இச்சட்டத்தின்கீழ் நடைமுறைப்படுத்துவதால் வணிகர்களுக்கு பேருதவியாக இருக்கும். தங்கு தடையற்ற சரக்குப் போக்குவரத்துக்கு இணைய வழியிலான எளிய சேவை வழங்கப்படுகின்றது.  மேலும் எளிய மற்றும் ஒரே கணக்கு நடைமுறை பின்பற்றப்படுகின்றது.

உற்பத்தி வரி, சேவை வரி, மதிப்பீட்டு கூட்டு வரி, மத்திய விற்பனை வரி, நுழைவு வரி போன்றவைகள் ஒன்றினைக்கப்பட்டு ஒரே வரியான ஜிஎஸ்டி நடைமுறைப்படுத்தப்படுவதால் பொருட்களின் விலை குறைந்து நுகர்வோர்களுக்கு நன்மை தரக்கூடியதாக உள்ளது. நாடுமுழுவதும் பொருள்களின் விலை சீராக அமையப்பெரும், வெளிப்படைத்தன்மையான நிர்வாக முறைக்கு வழிவகுக்கும், வேலைவாய்ப்பும் அதிகரிக்கும். 

உள்நாட்டு உற்பத்தி அதிகரித்து நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும்.  மேலும், நாட்டின் முதுகெலும்பாக உள்ள விவசாயத்திற்கு உறுதுணையாக இருக்கும் வகையில் விவசாய உரங்கள், மற்றும் டிராக்டர் போன்றவற்றின் வரி ஜிஎஸ்டி-யால் குறைக்கப்பட்டுள்ளது. 

கோவை மாவட்டம் தமிழ்நாட்டின் முக்கிய உற்பத்தி நகரமாக விளங்குகின்றது. ஜிஎஸ்டி வரிவிதிப்பின் மூலம் நமது மாவட்டத்தில் முந்தைய வரி விதிப்பினால் ஏற்றுமதியிலிருந்த சிரமங்கள் நீக்கப்பட்டுள்ளது. புதிய  தொழில் முனைவோர்களுக்கு இருந்த இடர்பாடுகள் களையப்பட்டுள்ளது. மேலும், மத்திய மாநில அரசுகளுக்கு தனித்தனியாக வரிப்படிவங்கள் சமர்பிக்க வேண்டியிருந்து அதுபோன்றதொரு சூழ்நிலை இனி இருக்காது. கோவை கோட்டத்திலுள்ள 1.10 லட்சம் வணிகர்களும் இதில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்ட ஜிஎஸ்டி சட்டம் நடைமுறைப்படுத்த உறுதுனையாக இருக்கவேண்டும்.

நாட்டினை முன்னேற்றப்பாதையில் கொண்டுசெல்லும் ஜிஎஸ்டி வரிவிதிப்பு குறித்து பொதுமக்களிடத்திலும் சில உற்பத்தியாளர்களிடத்திலும் போதிய புரிதல் இல்லாததால் ஏதிர்மறை கருத்துகள் உலாவுகின்றன. மத்திய மற்றும் மாநில அலுவலர்கள் நுகர்வோர்களையும், உற்பத்தியாளர்களையும் ஜி.எஸ்.டி வரி விதிப்பு குறித்து தெளிவான விளக்கங்கள் சென்றடையும் வகையில் சிறப்பு விழிப்புணர்வு கருத்து முகாம்களை நடத்திட வேண்டும். வரித்துறை தொடர்பான அனைத்து அலுவலகங்களிலும் உதவி மையங்கள் வாயிலாக நுகர்வோர்கள் மற்றும் உற்பத்தியாளர்களின் சந்தேகங்களை போக்கிட வேண்டும். 

சரியான பொருளாதாரப்பாதையில் தமிழ்நாட்டினை மட்டுமல்லாது ஒட்டுமொத்த பாரதத்தினையே அழைத்துத்துச் செல்லும் சரக்கும் மற்றும் சேவை வரிவிதிப்பிற்கு உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோர்கள் தங்கள் ஒத்துழைப்பினை அளித்திட வேண்டுமென மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் பேசினார்.

இந்நிகழச்சியில் ஆணையர் குமரேஷ், இணை ஆணையர் ரஷ்மி சித்தார்த் ஜகடே, இணை ஆணையர் செயலாக்கம் அம்ரித், துணை ஆணையர் கயல்விழி, பொதுமக்கள் மற்றும் வணிகவரித்துறை அலுவலர்கள் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...

சூலூர் சிறுமி கொலை வழக்கு: POCSO சட்டத்தில் வழக்குப்பதிவு

கோவை சூலூர் பகுதியில் சிறுமி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது உறுதி...

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...